
கோஹ்லியின் கேப்டன் சாதனை
டெஸ்ட் கேப்டனாக இந்தியாவின் விராத் கோஹ்லி சாதனை படைத்த ஆண்டு இது. ஒரு கேப்டனாக அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு சதங்கள் போட்டு சாதனை படைத்தார் கோஹ்லி. இப்படி அடுத்தடுத்து நான்கு சதங்களை அடித்த முதல் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை கோஹ்லிக்குச் சொந்தமானது.

பீல்டிங்கில் பின்னிய ரஹானே
பீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார் ரஹானே. அருமையான பீல்டரான அஜிங்கியா ரஹானே, ஆகஸ்ட் 14ம் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது 8 கேட்ச்சுகளைப் பிடித்து அசத்தினார். கீப்பர் அல்லாத ஒரு பீல்டர் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக அளவிலான கேட்ச்சுகளைப் பிடிப்பது அதுவே முதல் முறையாகும். அந்த வகையில் அது சாதனையாக அமைந்தது.

பிரமிக்க வைத்த டிவில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க சூப்பர் ஸ்டார் ஆப் டி வில்லியர்ஸ், ஜனவரி 18ம் தேதி மேற்குஇந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெறும் 31 பந்துகளில் சதம் போட்டு உலக சாதனை படைத்தார்.

சரித்திரம் படைத்த சங்கக்கரா
இலங்கை வீரர் குமார் சங்கக்கரா தன் பங்குக்கு ஒரு சாதனை படைத்தார். உலகக் கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்து நான்கு சதம் அடித்து அசத்தினார். புதிய உலக சாதனை இது.

கெய்ல் புயல்
பிப்ரவரி 24ம் தேதி நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது ஜிம்பாப்வேயை போட்டுப் புரட்டி எடுத்து விட்டார் கிறிஸ் கெய்ல். 147 பந்துகளைச் சந்தித்த அவர் 215 ரன்களை குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அதி வேக இரட்டை சதம் போட்டு உலக சாதனை படைத்தார்.

ஜோகோவிக் சாதனை
இப்படி கிரிக்கெட் அதகளப்பட்டது என்றால் மறுபக்கம் டென்னிஸிலும் அனல் பறந்தது. செர்பியா்வின் நோவாக் ஜோகோவிக், தனது 5வது ஆஸ்திரேலிய ஓபன் சாபம்பியன் பட்டத்தை வென்றார். ஓபன் எரா காலத்தில் ஐந்து ஆஸ்திரேலிய பட்டங்களை வென்ற முதல் வீரர் ஜோகோவிக்தான்.

105 வயதில் அசத்திய மியாஸகி
இளைய தலைமுறை மட்டுமல்ல, மூத்த குடிமகன் ஒருவரும் விளையாட்டில் வரலாறு படைத்தார். ஜப்பானைச் சேர்ந்த ஹிடகிசி மியாஸகி என்பவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு 42.22 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து அசத்தினார்.. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா.. மியாஸகிக்கு வயது ஜஸ்ட் 105 மட்டுமே.!


Click it and Unblock the Notifications