Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 12 மாதத்தில்... 13 டெஸ்ட், 8 ஒன்டே, 3 டி20... இந்தியா ஆடப் போகுது பாஸ்.. இந்தியாவில்!

மும்பை: 2016-17ம் ஆண்டுக்கான கிரிக்கெட் காலண்டரை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 12 மாதங்களில் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகள், 8 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.

ராஜ்கோட், விசாகப்பட்டனம், புனே, தரம்சலா, ராஞ்சி, இந்தூர் ஆகிய நகரங்களில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2016-17 season: India to play 13 Tests, 8 ODIs, 3 T20Is at home

இந்தியாவில் இந்தியா மோதும் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்துடனான தொடருடன் தொடங்குகிறது. இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளன. இதையடுத்து இங்கிலாந்துடன் நடைபெறும் தொடரில் 5 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் நடைபெறும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. அப்போது நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன. அடுத்து வங்கதேசம் இந்தியா வருகிறது. அந்த அணியுடன் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடும்.

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்தூர், கான்பூர், கொல்கத்தாவில் நடைபெறும். நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டிகள் தரம்சலா, டெல்லி, மொஹாலி, ராஞ்சி, விசாகப்பட்டனம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகள் மொஹாலி, ராஜ்கோட், மும்பை, விசாகப்பட்டனம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறும். இந்த அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டிகள் புனே, கட்டாக், கொல்கத்தாவில் நடைபெறும். இந்தியா இங்கிலாந்து இடையிலான டி20 போட்டிகள் பெங்களூரு, நாக்பூர், கான்பூர் நகரங்களில் நடைபெறும்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூரு, தரம்சலா, ராஞ்சி, புனே நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, June 9, 2016, 15:09 [IST]
Other articles published on Jun 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+