Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் மின்னல் வேகத்தில் மிரண்ட வீரர்

கொழும்பு: கொழும்புவில், நேற்று இந்தியா - இலங்கைக்கு இடையேயான டி-20 போட்டிக்கு முன்பாக, மழை பெய்தது. அப்பாடா தப்பித்தோம் என்று இலங்கை வீரர்கள், வருண ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

ஆனால், போட்டி நடந்தது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். ஆனால், போட்டியின் போது தாக்கிய டோணியின் மின்னல் வேக ஸ்டம்பிங் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

என்னடா இன்னைக்கு டோணி புராணம் இல்லையே என்ற உங்களுடைய புலம்பல் எங்களுக்கு கேட்டுவிட்டது. இந்தியா - இலங்கை போட்டித் தொடர்களில், 9-0 என, இந்தியா வென்றது எல்லாம் இப்போது ஒரு மேட்டரே கிடையாது.

சாதனைகள்

சாதனைகள்

இந்தத் தொடரில், பல சாதனைகளைப் புரிந்ததுடன், விமர்சனம் செய்தவர்களுக்கு தனது ஆட்டத்தில் பதில் சொல்லி வருகிறார் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி.

100 ஸ்டம்பிங்

100 ஸ்டம்பிங்

ஒரு நாள் போட்டிகளில், சமீபத்தில், 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோணி புரிந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து, கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் செய்திருந்த டுவிட் தான் டாப். `மின்னல் அடிக்கடி வராது என்று யார் சொன்னது. 100 முறை வந்துள்ளது' என்று சச்சின் கூறியிருந்தார்.

 வெறும் புகழ்ச்சி அல்ல

வெறும் புகழ்ச்சி அல்ல

இது வெறும் புகழ்ச்சிக்காக கூறப்பட்டதாக நீங்கள் நினைத்தால், நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியை பார்க்கவில்லை என்று அர்த்தம். யுஸ்வெந்திரா சாஹல் வீசிய பந்தில், இலங்கை வீரர் மேத்யூசை ஸ்டம்பிங் செய்தார் டோணி. எப்போது பந்து அவரிடம் போ்சசு, எப்போது ஸ்டம்பிங் செய்தார் என்பது தெரியாத அளவுக்கு அவருடைய வேகம்.

செம ஸ்பீட்

செம ஸ்பீட்

ஸ்லோமோஷனில் பார்க்கும்போது, மிகவும் வேகமாக இருந்தது டோணியின் ஸ்டம்பிங். உலகின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பராக டோணி இருப்பதற்கான காரணம் இந்த ஸ்டம்பிங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது தெரிகிறதா டோணி குறித்து ஏன் சிலாகிக்கிறோம் என்று.

Story first published: Thursday, September 7, 2017, 18:25 [IST]
Other articles published on Sep 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+