கோஹ்லி எப்போது ரிடையர்ட் ஆவார் தெரியுமா?
டெல்லி: இது என்னடா கூத்து. நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. இப்ப எதுக்கு இந்தப் பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம். 28 வயதாகும் விராட் கோஹ்லி, இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு விளையாட வந்து, 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.
சமீபத்தில் முடிந்த இலங்கையுடனான சூப்பர் தொடர் வெற்றிகளையும் சேர்த்து, இதுவரை, 59 டெஸ்ட்களில், 4,616 ரன்கள் எடுத்துள்ளார்.
அதில், 17 சதம், 14 அரை சதங்கள் அடித்துள்ளார். 194 ஒருதினப் போட்டிகளில், 8,587 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 30 சதம், 44 அரை சதங்கள் கண்டுள்ளார்.

அபார சாதனையாளர்
2008ல், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று தந்தவர், கேப்டனாக இருந்த கோஹ்லி. மிக குறுகிய காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடி, அதிலும் அபார சாதனைகளைப் படைத்துள்ளார்.

10 வருடங்கள்
இந்திய அணியின் பிட்னஸ் கான்ஷியஸ் உள்ள வீரரான கோஹ்லி, அடுத்த, 10 ஆண்டுகள் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோஹ்லி, "எத்தனை காலம் நம்மால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

கடினமாக உழைக்க வேண்டும்
ஆனால், பல நேரங்களில், நம்முடைய திறமையில், 70 சதவீதம் வரைதான் கொடுக்க முடிகிறது. அதனால், நன்கு கடினமாக உழைக்க வேண்டும். நான் தற்போது கொடுத்து கொண்டிருக்கும் இதே முயற்சியை தொடர்ந்து கொடுத்தால், அடுத்த, 10 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட முடியும்" என்று கூJfயுள்ளார்.

10 வருஷத்துக்குப் பேசப்படாது
இதன் மூலம் அடுத்த பத்து வருடங்களுக்கு தான் ஓய்வைப் பற்றி நினைக்கப் போவதில்லை என்று பூடகமாக கூறி விட்டார் கோஹ்லி. எனவே கோஹ்லியின் ஓய்வு குறித்து, அடுத்த, 10 ஆண்டுகளுக்கு யாரும் பேசக் கூடாது. புரிஞ்சுதா?


Click it and Unblock the Notifications