முறியும் மூவர் கூட்டணி.. இணையும் சிஎஸ்கே வீரர்.. நடராஜனை வைத்து பிசிசிஐ போடும் மாஸ் பிளான்..பின்னணி
டெல்லி: 2021ல் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணியில் நடராஜன் மற்றும் சிஎஸ்கே வீரர் ஒருவரை வைத்து பிசிசிஐ மாஸ் திட்டம் ஒன்று வகுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த 3 வருடமாக இந்திய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகம் செலுத்தி வந்தது மூன்று பவுலர்கள்தான். பும்ரா, சமி, புவனேஷ்வர்குமார் ஆகிய மூன்று பவுலர்கள்தான் கடந்த மூன்று வருடமாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இவரில் யாராவது ஒருவர் காயம் அடைந்தால் மட்டுமே புதிய பவுலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மற்றபடி இந்த மூன்று பேரும்தான் இந்திய அணியில் நிரந்தரமாக வாய்ப்பு பெற்று வந்தனர்.

எப்படி
இந்த நிலையில் இந்த மூவர் கூட்டணி வரும் 2021ல் உடையும் என்கிறீர்கள். இந்திய அணியில் நடராஜன் மற்றும் சிஎஸ்கே வீரர் ஒருவரை வைத்து பிசிசிஐ மாஸ் திட்டம் ஒன்று வகுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி இந்திய அணியில் பும்ரா தொடர்ந்து நீடிப்பார். ஆனால் ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் ஒருவர் ஆட வாய்ப்பு இல்லை.

வாய்ப்பு இல்லை
இந்த இரண்டு பேரில் பெரும்பாலும் புவனேஷ்வர் குமாருக்கு வரும் நாட்களில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அல்லது மொத்தமாக ஷமி, புவி இரண்டு பேருக்குமே வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்கிறார்கள். இவர்களின் இடத்தை நடராஜன், சிஎஸ்கே வீரர் ஷரத்துல் தாகூர் இரண்டு பேரும் நிரப்ப வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

டி 20 அணி
டி 20 அணியில் ஷமி, பும்ரா, நடராஜன் ஆகியோர் முதல்நிலை பவுலிங் தேர்வாக இருப்பார்கள். டி 20ல் பும்ரா, நடராஜன், ஷரத்துல் ஆகியோர் முதல் நிலை பவுலிங் தேர்வாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் முழுக்க நடராஜனுக்கு முக்கிய வருடமாக இருக்க போகிறது.

முக்கியம்
2021ம் வருடத்தில் இந்திய அணியின் முக்கியமான பவுலிங் தேர்வாக நடராஜன், ஷரத்துல் இருப்பார்கள். டி 20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளது. இதில் நடராஜன், ஷரத்துல் இரண்டு பேரும் முக்கிய இடம் வகிப்பார்கள். ஷரத்துல் நன்றாக பேட்டிங் செய்வதால் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications