Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட் அணி இதோ..!!

மும்பை: ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடக் கூடிய
வீரர்களை ஒரே அணியாக தேர்வு செய்து ஐ.சி.சி. அறிவிப்பது வழக்கம்.

தற்போது ஐ.சி.சி. அறிவிப்பதற்கு முன்பே இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியாக தனது கனவு அணியை அறிவித்துள்ளார்.

இதில் யார் இடம்பெற்றுள்ளார்கள், யார் கேப்டன் என்பதை தற்போது காணலாம்

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரராக ரோகித் சர்மாவை ஆகாஷ் தேர்வு செய்துள்ளார். ரோகித் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி நடப்பாண்டில் டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மற்றொரு தொடக்க வீரராக இலங்கை அணியின் கருணரத்னே ஆகாஷ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

கேப்டன்

கேப்டன்

நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் விளாசிய ஜோ ரூட்டுக்கு 3வது இடத்தை ஆகாஷ் வழங்கியுள்ளார். கேப்டன் மற்றும் 4வது வீரராக நியூசிலாந்து அணியின் வில்லியம்சனை சோப்ரா தேர்வு செய்துள்ளார். பல ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு திரும்பி சதம் சதமாக விளாசிய ஃபாபத் அலாம் 5வது வீரராக ஆகாஷ் அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய வீரர் ரிஷப் பண்ட்க்கும் ஆகாஷ் அணியில் இடம் கிடைத்துள்ளது

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இதே போன்று சுழற்பந்துவீச்சாளராக நடப்பு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினையும், அக்சர் பட்டேலையும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். வேகப்பந்துவீச்சாளராக நியூசிலாந்து விரர் கெயில் ஜேமிசன், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா ஆப்ரிடி ஆகியோரை ஆகாஷ் தமது கனவு அணியில் தேர்வு செய்துள்ளார்

இடமில்லை

இடமில்லை

ஆகாஷ் சோப்ராவின் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, பும்ரா, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், லாபஸ்சேங் ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஆகாஷ் சோப்ராவை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Monday, December 13, 2021, 18:43 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+