ஐ.சி.சி. விருதுகளில் பாகிஸ்தான் ஆதிக்கம்..!! இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய ஸ்மிருதி மந்தானா..!!
துபாய் : ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் , ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படும்
Recommended Video
2021ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கலக்கியவர்களுக்கு தனித்தனியே வழங்கப்படும்.
இந்த விருது பட்டியலில் இந்திய ஆடவர் அணியை சேர்ந்த யாரும் இடம்பெறாத நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் மூன்று விருதுகளை தட்டி சென்றுள்ளனர்

பாபர் அசாம்
2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கான விருதை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் வென்றார். இந்த விருதை வென்ற முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். பாபர் அசாம்,6 போட்டிகளில் விளையாடி 445 ரன்களை குவித்தார்.இதில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 158 ரன்கள் குவித்தார்.

சிறந்த டெஸ்ட் வீரர்
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் என்ற ஐ.சி.சி. விருதை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வென்றார். ஜோ ரூட் 2021ஆம் ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1708 ரன்களை குவித்தார். சென்ற ஆண்டில் அவர் 6 சதங்களை விளாசி இருந்தார்.

சிறந்த டி20 வீரர்
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் வென்றார். 29 டி20 போட்டியில் விளையாடிய அவர் 1326 ரன்களை விளாசியுள்ளார். இதனையடுத்து அவடா சிறந்த டி20 போட்டிக்கான ஐ.சி.சி. விருதை வென்றார்

2021 சிறந்த கிரிக்கெட் வீரர்
இதே போன்று 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதை பாகிஸ்தான் அணி கேப்டன் சாஹின் அஃபிரிடி வென்றார். கடந்த ஆண்டு 36 சர்வதேச போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை சாஹின் ஆப்ரிடி வீழ்த்தினார். இதனையடுத்து இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது

2021 சிறந்த கிரிக்கெட் வீராங்கனை
2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை ஸ்மிருதி மந்தானா வென்றார். இது அவர் வெல்லும் 2வது விருதாகும். 2021ஆம் ஆண்டு மந்தானா 22 சர்வதேச போட்டிகளில் விளையாடி 855 ரன்களை விளாசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்டில் மந்தானா சதம் விளாசினார்.


Click it and Unblock the Notifications