Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு அதிர்ச்சி.. கிரிக்கெட்டில் ஆஸி அணியிடம் வீழ்ந்த இந்திய அணி

பிர்மிங்காம்: 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பார்பிடாஸ் அணிகளுடன் மோதுகிறது.

இதில் முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 17 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு ஜோடியாக விளையாடிய செபாலி வர்மா, 33 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

ஹர்மன்பிரீத் சிங் அரைசதம்

ஹர்மன்பிரீத் சிங் அரைசதம்

யாஷ்திகா பாட்டியா 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, ஜெமிமா 11 ரன்கள், தீப்தி சர்மா 1 ரன்கள் என மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் தனி ஆளாக போராடிய ஹர்மன்பிரித் கவுர் 34 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அலிசா ஹெலி டக் அவுட்டாகியும், பெத் மூனி 10 ரன்களிலும், கேப்டன் மேக் லென்னிங் 8 ரன்களிலும், தஹிலா மெக்ராத் 14 ரன்களிலும், ஹெய்னஸ் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

இதனால் ஆஸ்திரேலிய அணி 49 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து போராடியது. எனினும் கார்டனர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஜோடி இணைந்து அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கார்டனர் 35 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து தனி ஆளாக, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனை ரெனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 31ஆம் தேதி சந்திக்கிறது.

Story first published: Tuesday, August 9, 2022, 19:06 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+