Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த்தில் இந்திய மகளிர் அணி அபாரம்..அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்..பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி

பிர்மிங்காம்: 2022 காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்தது.

இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

சரிவு

சரிவு

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை இரம் ஜாவித் டக் அவுட்டாகி வெளியேறினார் இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மஹ்ருப் மற்றும் முனிபா அலி பொறுப்புடன் விளையாடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், மஹ்ருப் 17 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு பாகிஸ்தான் மகளிர் அணி பெரும் சரிவை சந்திக்க தொடங்கியது.

99 ஆல் அவுட்

99 ஆல் அவுட்

ஓமைமா 10 ரன்களிலும், ஆய்ஷா 10 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி அதன் பிறகு ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்டது. வெறும் 8 பந்துகள் இடைவெளியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 99 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த இன்னிங்சின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். இந்திய பந்துவீச்சு தரப்பில் ராணா, ராதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்மிருதி அதிரடி

ஸ்மிருதி அதிரடி

இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தியது. செஃபாலி வர்மா சேவாக் போல் அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 16 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து மேக்னா 16 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

எகிறிய ரன் ரேட்

எகிறிய ரன் ரேட்

31 பந்துகளில் அரைசதம் விளாசிய மந்தானா, 42 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து இந்திய அணி 11.4வது ஓவரிலேயே,வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இதன் மூலம் மைனஸ் 0.56 என இருந்த இந்திய அணியின் ரன் ரேட் தற்போது 1.17 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்திற்கு சென்றது.

Story first published: Tuesday, August 9, 2022, 19:04 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+