Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 பந்துகளில் 5 விக்கெட்டுகள்.. 99 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான். காமன்வெல்த்தில் இந்திய மகளிர் அபாரம்

பிர்மிங்காம்: 2022 காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்தது.

இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை இரம் ஜாவித் டக் அவுட்டாகி வெளியேறினார்

இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மஹ்ருப் மற்றும் முனிபா அலி பொறுப்புடன் விளையாடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், மஹ்ருப் 17 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு பாகிஸ்தான் மகளிர் அணி பெரும் சரிவை சந்திக்க தொடங்கியது.

2022 commonwealth games – Pakistan is all out for 99 runs vs India

ஓமைமா 10 ரன்களிலும், ஆய்ஷா 10 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி அதன் பிறகு ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்டது. வெறும் 8 பந்துகள் இடைவெளியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 99 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்த இன்னிங்சின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். இந்திய பந்துவீச்சு தரப்பில் ராணா, ராதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்தது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் பெரிய வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் விளையாடுகிறது.

Story first published: Tuesday, August 9, 2022, 19:04 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+