Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 டி20 உலககோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு.. ஐசிசியின் மெகா பம்பர் பரிசு.. அனைத்து அணிக்கும் பரிசு

துபாய் : 2022 ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கான பரிசு தொகை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

T20 World Cup 2022 பரிசுத்தொகை ICC வெளியிட்ட பட்டியல்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை t20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஐசிசி பரிசுகளை வழங்கும்.

இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த ஆண்டு மொத்தம் 5 மில்லியன் ரூபாய் மொத்தமாக பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

சாம்பியனுக்கு எவ்வளவு

சாம்பியனுக்கு எவ்வளவு

இது இந்திய ரூபாய் மதிப்பில் 45 கோடியே 67 லட்சம் ரூபாய் ஆகும். டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் 13 கோடி ரூபாயாகும். இறுதி போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஆறரை கோடி ரூபாய் வழங்கப்படும் .

அரையிறுதி சுற்றுக்கு பரிசு

அரையிறுதி சுற்றுக்கு பரிசு

அரை இறுதியில் தோல்வி அடையும் அணிக்கு தலா 3 கோடியே 26 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இதேபோன்று சூப்பர் 6 சுற்று ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தலா 32 லட்சம் ரூபாய் இந்திய ரூபாய் மதிப்பில் பரிசாக வழங்கப்படும். இதேபோன்று சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறும் அணிக்கு தலா 57 லட்சம் ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது.

முதல் சுற்றில் பரிசு

முதல் சுற்றில் பரிசு

இதேபோன்று முதல் சுற்றில் விளையாடும் அணிக்கு ஒவ்வொரு போட்டியில் வென்றால் தலா 32 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதே போன்று முதல் சுற்றில் இருந்து வெளியேறும் அணிக்கு தலா 32 லட்சம் ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வரும் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதில் மொத்தம் 16 அணிகள் பங்கே இருக்கிறது.

கிரிக்கெட் vs கால்பந்து

கிரிக்கெட் vs கால்பந்து

இந்த நிலையில் இது கால்பந்து உலகக் கோப்பைக்கு வழங்கப்படும் பரிசு தொகையை காட்டிலும் சொற்பமான அளவு தான் கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உதாரணமாக ஐசிசி மொத்தமாகவே 5. 6 மில்லியன் ரூபாய் தான் பரிசாக வழங்குகிறது. ஆனால் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் மணிக்கு 42 மில்லியன் அளவுக்கு பரிசு தொகை வழங்கப்படும் .மொத்தமாக 440 மில்லியன் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Story first published: Friday, September 30, 2022, 15:09 [IST]
Other articles published on Sep 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+