Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்திய அணி மேட்ச் விவரங்கள்!

துபாய்: இன்றைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான்களாக விளங்கும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்மித்,வில்லியம்சன் உள்ளிட்டவர்கள் இளைஞர்களாக u-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கியவர்கள் தான்

நாளைய நட்சத்திரங்களை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது.

தற்போது இந்த தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் உகாண்டா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.

4 பிரிவுகள்

4 பிரிவுகள்

குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, கனடா மற்றும் யூ.ஏ.இ. அணி இடம்பிடித்தது. குரூப் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய அணிகளும், குரூப்-சி பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே, பி.என்.ஜி அணிகளும் இடம்பிடித்துள்ளன. குரூப் டி பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் உள்ளன.

 மைதானங்கள்

மைதானங்கள்

முதல் முறையாக ஐ.சி.சி. U-19 உலக கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் நடத்துகிறது. ஆண்டிகுவா, டிரிண்டாட் டொபாகோ, கயானா மற்றும் செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் ஆகிய இடங்களில் உள்ள 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அட்டவணை

அட்டவணை

இந்தியா தனது போட்டியை ஜனவரி 15ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறது.ஜனவரி 19ஆம் தேதி இந்தியா, அயர்லாந்துடன் மோதுகிறது. ஜனவரி 22ஆம் தேதி இந்தியா, உகாண்டாவுடன் மோதுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணி சூப்பர் லீக் சுற்றில் விளையாடும். அதில் முதல் 4 இடம் பிடிக்கும் அணி அரையிறுதி தகுதி பெறும்

அரையிறுதி

அரையிறுதி

முதல் அரையிறுதி ஆட்டம் பிப்ரவரி 1ஆம் தேதியும் , 2வது அரையிறுதி பிப்ரவரி 2ஆம் தேதியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஆண்டிகுவாவில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது

சாம்பியன்கள்

சாம்பியன்கள்

U-19 உலகக் கோப்பையை அதிகபட்சமாக இந்தியா 4 முறையும், ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளது.

Story first published: Wednesday, November 17, 2021, 22:03 [IST]
Other articles published on Nov 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+