
இளம் வீரர்கள்
2022ஆம் ஆண்டில் ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை நிகழ போகிறது. இதற்கான அணியை தயாரிக்கும் பணியில் பி.சி.சி.ஐ. தற்போதே ஈடுபட்டு வருகிறது. இதில் தலைமை பொறுப்பை ஏற்கும் ரோகித் சர்மா, அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவார். குறிப்பாக ஷாரூக்கான், வெங்கடேஷ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான், ஹர்சல் பட்டேல் ஆகியோர் டி20 அணியில் நிரந்தர இடம் பிடிக்க உள்ளனர்

சீனியர்களுக்கு கல்தா
2022ஆம் ஆண்டில் பல சீனியர் வீரர்கள் அணியை விட்டு நீக்கப்பட உள்ளனர். குறிப்பாக புஜாரா, ரஹானே உள்ளிட்ட வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டு, விஹாரி, அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. சீனியர்கள் தங்களது ஃபார்மை மீட்க இனி உள்ளூர் போட்டியில் விளையாடுவது கட்டாயமாக்கப்படும்

சச்சினுக்கு பொறுப்பு
பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் இனி சச்சினும் புதிய ஆண்டு முதல் களமிறங்க உள்ளார். சச்சின் தேர்வுக்குழுத் தலைவராகவோ இல்லை, பி.சி.சி.ஐ. ஆலோசனை குழு உறுப்பினராகவோ இல்லை, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவோ செயல்பட வாய்ப்பு உள்ளது.

அணி தேர்வு நேரலை
இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அணி தேர்வை நேரலை செய்ய பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி ஆலோசனை நடத்தி வருகிறார். இதே போன்று மகளிருக்கான ஐ.பி.எல் தொடர் புத்தாண்டில் தொடங்கவும் வாய்ப்புள்ளது.

இனி வேறு சேனல்
இதே போன்று புதிய ஆண்டு முதல் இனி இந்திய கிரிக்கெட் அணிகளின் போட்டி, ஐ.பி.எல். போட்டிகளை சோனி மூலம் கூட காண நேர வாய்ப்புள்ளது. இதே போன்று ஐ.பி.எல். டிஜிட்டல் உரிமம், இந்திய கிரிக்கெட் போட்டிகளின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் மூலம் காண வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications