For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை சீண்டிய சீனா..!! குளிர்கால ஒலிம்பிக் போட்டி இந்திய அதிகாரிகள் புறக்கணிப்பு-நேரலை ரத்து

பீய்ஜிங்: 24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த தொடரில் 94 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இறுதி கவுண்டவுனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி தொடர் ஓட்டம் நேற்று தொடங்கியது.இதில் ஜாக்கிசான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றன.

மனித உரிமை மீறல்

மனித உரிமை மீறல்

சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாகவும், சிறுபான்மை இஸ்லாமியர்களை சீனா சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் குவிந்தன. மேலும் மீ டூ புகார் அளித்த டென்னிஸ் வீராங்கனை பெங் சூயி மிரட்டப்பட்ட விவகாரமும் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அமெரிக்கா புறக்கணிப்பு

அமெரிக்கா புறக்கணிப்பு

இந்த சம்பவங்களை கண்டித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியாக குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்தது. ஆனால் இந்தியா சார்பாக ஆரிஃப் கான் என்ற ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பங்கேற்கிறார். இதில் இந்திய அதிகாரிகளும் தொடக்க விழாவில் பங்கேற்க இருந்தனர்.

சீனா சீண்டல்

சீனா சீண்டல்

இந்த நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்லும் பொறுப்பு, ஃபாபிலோ என்ற சீன ராணுவ கமெண்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை கொன்ற சம்பவத்தில் தொடர்பு உடையவன் ஆவான். சீனாவின் இந்த செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

மேலும் சீனாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியாக புறக்கணிக்க இந்தியா முடிவு எடுத்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவிலும் இந்தியா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க விழாவின் நேரலையை மத்திய அரசின் உத்தரவுப்படி தூர்தஷன் ரத்து செய்துள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 23:26 [IST]
Other articles published on Feb 3, 2022
English summary
2022 Winter Olympics India boycott opening ceremony for china action இந்தியாவை சீண்டிய சீனா..!! குளிர்கால ஒலிம்பிக் போட்டி இந்திய அதிகாரிகள் புறக்கணிப்பு-நேரலை ரத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+