Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஆசிய கோப்பையில் அதிர்ச்சி.. பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா.. வரலாற்றிலேயே 3வது தோல்வி

சில்ஹெட் : மகளிர் ஆசிய கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. டி20 வரலாற்றிலேயே இந்தியா பாகிஸ்தானிடம் 3 போட்டியில் மட்டும் தான் தோற்று இருக்கிறது.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. இதனால் இழந்த மானத்தை மீட்கும் முயற்சியில் பாகிஸ்தான் அணி, இன்று இந்தியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அணிக்கு திரும்பினார். செஃபாலி வர்மாவுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

பாகிஸ்தான் அணியில் முனிபா அலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, சிட்ரா அமீன் 11 ரன்களில் வெளியேறினார். கேப்டன் மிஸ்பா மகரூப் பொறுப்புடன் விளையாடி 35 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். ஓமைம்மா சோஹைல் டக் அவுட்டாகியும், அலியா ரியாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தது.

அரைசதம்

அரைசதம்

எனினும் மறுமுனையில் அதிரடியை காட்டிய நிடா டர், 37 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சில் தீப்தி சர்மா 3 விக்கெட்களும், பூஜா 2 விக்கெட்களும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை இந்தியா துரத்தியது. தொடக்க வீராங்கனை மேக்னா 15 ரன்களில் வெளியேற, ஸ்மிருதி மந்தானா 17 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா 2 ரன்களும், ஹேமலதா 20 ரன்களும், பிஜா 5 ரன்களும் எடுக்க இந்திய மகளிர் அணி தடுமாறியது.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்மான்பிரித் 12 ரன்களிலும், ராதா யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, ரிச்சா கோஸ் மட்டும் தனி ஆளாக நின்று 3 சிக்சர், 1 பவுண்டரி எடுத்து 13 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , முக்கிய கட்டத்தில் அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 19.4வது ஓவரில் 124 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

Story first published: Friday, October 7, 2022, 21:37 [IST]
Other articles published on Oct 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+