Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 மகளிர் ஆசிய கோப்பை டி20 ..இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனைக்கு வாய்ப்பு..எந்த சேனலில் காணலாம்

டாக்கா : மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி இதுவடிர 6 முறை வென்றுள்ளது. இந்த நிலையில், 7வது முறையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது.

ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் யு.ஏ.இ வில் நடைபெற்றது. இதில் இந்திய அணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்தியாவின் சாதனை

இந்தியாவின் சாதனை

இதனால், இந்திய ஆடவர் அணி செய்ய முடியாததை, மகளிர் அணி செய்து காட்ட வேண்டிய உத்வேகத்துடன் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை, கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை 2க்கு1 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஒருநாள் தொடரை 3க்கு0 என்ற கணக்கில் ஓயிட்வாஷ் செய்து அசத்தி இருக்கிறது.

மான்கட் விவகாரம்

மான்கட் விவகாரம்

இந்திய மகளிர் அணி வீராங்கனை தீப்தி சர்மா செய்த மான்கட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஐசிசி விதிப்படியே தீப்தி சர்மா நடைபெற்று இருப்பதாக விதிகளை வகுக்கும் எம்சிசியே விளக்கம் அளித்துள்ள நிலையில், இனி பந்து வீசுவதற்கு முன் கோட்டை விட்டு தாண்ட மாட்டேன் என்று இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் கூறியதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

பலமான அணி

பலமான அணி

ஆனால், இதனை ஒரு பிரச்சினையாகவே கருதாத இந்திய வீராங்கனைகள் அடுத்து ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தயாராகி வருகின்றனர். ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தானா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதே போன்று நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகியூஸ் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ரெனுகா, தீப்தி சர்மா என இந்தியாவின் பந்துவீச்சும் பலமாக உள்ளதால், வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என கருதப்படுகிறது.

 அணி விவரம்

அணி விவரம்

ஹர்மன்பிரித் கவுர்,ஸ்மிருதி மந்தானா, தீப்தி சர்மா, செஃபாலி வர்மா, ஜெமீமா ரொட்ரிகியூஸ், மேக்னா, ரிச்சா கோஸ், ஸ்னே ரானா, தாயலன் ஹேமலதா, மேக்னா சிங், ரெனுகா தாக்கூர், பூஜா, ராஜேஸ்வரி கெயாக்வாட், ராதா யாதவ்,

ரிசர்வ் வீராங்கனை -டானியா, சிம்ரன் பகதூர்

நேரலை - ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார்

Story first published: Tuesday, September 27, 2022, 16:38 [IST]
Other articles published on Sep 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+