IND vs WI போட்டி டிரா.. பறிப்போன புள்ளிகள்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் விவரம் இதோ
போர்ட் ஆப் ஸ்பெயின் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி தான் மோதும்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு புள்ளிகள் கிடைக்கும்.
இந்த நிலையில் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளும் முடிவே தெரியாமல் சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகளும், போட்டி டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் 6 புள்ளிகளும் வழங்கப்படும். ஆனால் புள்ளிகளை வைத்து கணக்கு போடாமல் புள்ளி சதவீத கணக்கை வைத்து இடம் நிர்ணயிக்கப்படும்.

இதனால் நூறு சதவீதம் புள்ளிகளை பெறுவதற்காக அனைத்து அணிகளும் வெற்றியை நோக்கி செல்கின்றன. இந்த நிலையில் மழை காரணமாக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதில் இந்திய அணி வெற்றி வாய்ப்பு இருந்தும் மழையால் ஆட்டம் நடக்கவில்லை. இதேபோன்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியும் மழை காரணமாக சமனில் முடிந்தது.
அதில் இங்கிலாந்து வெற்றி அருகே ஒரு கால் எடுத்து வைத்த நிலையில் மழையால் போட்டி சமனில் முடிந்தது. இந்த நிலையில் இந்த புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி 100% புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி 66.67 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 54.17 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 29.17 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி பதினாறு புள்ளி ஆறு ஏழு சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications