Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர்.. எந்த சேனல், ஓடிடியில் பார்ப்பது? எத்தனை மணிக்கு தொடக்கம்

பர்மிங்காம் : 2023 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை ஜூன் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மானப் பிரச்சினையாக ஆஷஸ் தொடர் பார்க்கப்படுகிறது.

2 ஆண்டுக்கு ஒரு முறை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த தொடர் மாறி மாறி நடக்கும். 72 முறை நடைபெற்று இருக்கும் இந்த தொடரை ஆஸ்திரேலியா 34 முறையும், இங்கிலாந்து 32 முறையும் வென்று இருக்கிறது. 6 முறை டிராவில் முடிவடைந்துள்ளது.

இதனால் இழந்த ஆஷஸ் கோப்பையை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இங்கிலாந்தில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த வரலாற்றை மாற்றும் முனைப்புடன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர்.

2023 Ashes Test series preview - where and when to watch streaming details

மார்னஸ் லாபஸ்சேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் டாப் 3 இடத்தில் உள்ளனர். உஸ்மான் கவாஜாவை சேர்த்து, டாப் 10 இடத்தில் 4 வீரர்கள் உள்ளனர். வேகப்பந்துவீச்சில் ஸ்காட் போலாந்த், பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற ஸ்டார் வீரர்கள் என சரி சமமான பலத்தில் அந்த அணி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன் என்ற அந்தஸ்தையும் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி, மன பலத்துடன் உள்ளது. ஆனால், இதற்கு சற்றும் குறையே இல்லாத அணியாக இங்கிலாந்து உள்ளது. பேஸ்பால் என்ற யுத்தியில், இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.

டிரா அடையும் போட்டியை கூட இங்கிலாந்து அணி வீரர்கள் வெற்றி பெற்று அதிர்ச்சி அளிக்கிறார்கள். ஸ்டோக்ஸ் தலைமையில் கடைசியாக விளையாடிய 11 டெஸ்டில் இங்கிலாந்து பத்தில் வென்று அசத்தி இருக்கிறது. எனினும் ஸ்டோக்ஸ், பாரிஸ்டோ போன்றோர் காயத்திலிருந்து திரும்பி இருப்பதும்,
நீண்ட நாட்களுக்கு பிறகு மோயின் அலி திரும்பி இருப்பது, ஜே ரூட் 2 மாதமாக ஐபிஎல்லில் நேரத்தை செலவிட்டது எல்லாம் கொஞ்சம் மைனசாக பார்க்கப்படுகிறது.

உண்மையான கிரிக்கெட் என்றால் என்ன என்பதை ரசிகர்கள் இந்த தொடரில் பார்ப்பார்கள். மதியம் 3.30 மணிக்கு இந்திய நேரப்படி இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் சோனி டென் 5 சேனலில் நேரலையில் கண்டுகளிக்கலாம். ஆன்லைனில் சோனி லிவ் ஆப்பில் இந்தப் போட்டி ஒளிப்பரப்பாகலாம்.

Story first published: Thursday, June 15, 2023, 15:34 [IST]
Other articles published on Jun 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+