கோலி, ரோகித் கிடையாது.. 2023ஆம் ஆண்டு அதிக மக்களால் கூகுளில் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் ?
மும்பை : 2023 ஆம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட பிரபலங்கள் யார் என்பது குறித்து அந்த நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்திய மக்கள் கூகுளில் ஒவ்வொரு ஆண்டும் யாரை அதிகமாக தேடுகிறார்கள் என்பது குறித்து பட்டியலை வெளியிடும்.
அந்த வகையில் நடப்பாண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் இந்திய ரசிகர்கள் வழக்கம்போல் கிரிக்கெட் சார்ந்த நபர்களையே அதிகம் தேடி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஆறு கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

முதல் இடத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இருக்கிறார். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் அதில் முதல் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் நீங்கள் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள். ஏனென்றால் கிரிக்கெட்டில் தற்போது அதிக ரசிகர்கள் கொண்டவர்கள் என்றால் அது விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி மட்டும்தான்.
ஆனால் இந்த மூன்று வீரர்களுமே இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆம் கிரிக்கெட் வீரர்களில் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தான். அதிக மக்களால் தேடப்படும் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார் கில். பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆகவும் நன்றாக பேட்டிங்கும் செய்து வருவதால் இந்திய ரசிகர்கள் இவர் குறித்து அதிகமாக கூகுளில் தேடி இருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா. நடப்பு உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் மேல் அடித்து பட்டையைக் கிளப்பினார் ரச்சின் ரவீந்தரா. இதனால் அவர் குறித்து இந்திய ரசிகர்கள் அதிகமாக தேடியிருக்கிறார்கள். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி.
உலக கோப்பை தொடரில் சமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தனி ஆளாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்ததால் சமி குறித்து ரசிகர்கள் கூகுளில் அதிக அளவில் தேடியிருக்கிறார்கள். இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார்.
இதனால் அவர் குறித்து ரசிகர்கள் அதிகம் கூகுளில் தேடியிருக்கிறார்கள். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சூரியகுமார் யாதவ். சூரியகுமார் யாதவும் நடப்பு உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனினும் இறுதிப் போட்டியில் அவர் மிகவும் மெதுவாக விளையாடி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
எனினும் டி20 யில் வழக்கம் போல் அவர் பட்டையைக் கிளப்பி வருவதுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஆகவும் களமிறங்கி வெற்றியை பெற்று தந்தார். இதனால் அவர் குறித்தும் மக்கள் அதிகமாக தேடி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தான்.
உலகக்கோப்பை தொடர் ஃபைனலில் டிராவிஸ் ஹெட் தான். அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் அவர் குறித்தும் இந்திய ரசிகர்கள் அதிகமாக தேடிருக்கிறார்கள். இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் அல்லாமல் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம் குறித்தும் இந்திய ரசிகர்கள் தேடி இருக்கிறார்கள். ஏனென்றால் டேவிட் பெக்கம் இந்த உலகக் கோப்பை தொடரை பார்க்க வந்ததால் அவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
Story first published: Monday, December 11, 2023, 15:53 [IST]
Other articles published on Dec 11, 2023


Click it and Unblock the Notifications