Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்.. உச்சத்தில் கிங் கோலி

மும்பை : ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் சமூக வலைத்தளத்தில் கொடிகட்டி பறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற பட்டியல் வெளியிடப்படும் அதன்படி நடப்பாண்டில் சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து காம் ஸ்கோர் நிறுவனம் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

இதில் எந்த வீரர்களின் சமூக வலைதள பதிவு அதிக பெயரால் பார்க்கப்பட்டது. எந்த வீரர் இடம்பெற்ற வீடியோ அதிக மக்களால் பார்க்கப்பட்டது. விளம்பர படங்களில் நடித்த எந்த கிரிக்கெட் வீரர்களின் பதிவு அல்லது வீடியோ அதிக மக்களால் காணப்பட்டது என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்படும்.

2023 Year ender - Virat kohli tops in social network impressions

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்த நம்பர் ஒன் வீரராக விராட் கோலி இருக்கிறார். விராட் கோலி சம்பந்தப்பட்ட பதிவுகளை சமூக வலைத்தளத்தில் 59 கோடியே 68 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் விராட் கோலி இடம் பெற்ற பூமா, ராங், எம்ஆர்எப் டயர்ஸ் ஆகிய விளம்பரங்கள் அதிக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

விராட் கோலி தொடர்பான வீடியோக்களை ஆறு கோடியே 66 லட்சம் பேர் கண்டு களித்து இருக்கிறார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அவர் தொடர்பான பதிவுகளை 24 கோடி பேர் கண்டு களித்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் கில் இருக்கிறார். அவர் தொடர்பான பதிவுகளை 19 கோடி பேர் கண்டு களித்து இருக்கிறார்கள்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். அவருடைய பதிவை 16 கோடியே 12 லட்சம் பேர் கண்டு களித்து இருக்கிறார்கள். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் இருக்கிறார். இவர் தொடர்பாக 13 கோடியே 13 லட்சம் பேர் சமூக வலைத்தளத்தில் கண்டு களித்திருக்கிறார்கள்.

எப்போதும் போல விராட் கோலியை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்து வருகிறார். இதற்கு சம்பளமாகவே விராட் கோலிக்கு பல கோடிகள் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் நட்சத்திர வீரர் தோனி இல்லாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Friday, December 8, 2023, 13:49 [IST]
Other articles published on Dec 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+