Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தேதி அறிவிப்பு.. 6 மாதங்களில் 2 உலககோப்பை நடத்த ஐசிசி முடிவு

மும்பை : 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதியை தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. நடப்பாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இந்தத் தொடர் முடிந்து அடுத்த ஆறு மாதத்திற்குள் ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஐசிசி ஆலோசனை நடத்தியது.

ind vs aus

இதில் 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜூன் நான்காம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் அமெரிக்காவில் ஃப்ளோரிடா, டல்லாஸ்,நியூயார்க் ,மோர்சிவெயில் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் விளையாட உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் என மொத்தம் நான்கு பிரிவுகள் லீக் சுற்றில் பிரிக்கப்பட உள்ளது. இதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக நான்கு அணிகள் களமிறங்கும்.அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும்.
டி20 உலக கோப்பையில் அதிக அணிகளை சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த நல்ல முடிவை ஐசிசி எடுத்துள்ளது. மேலும் இந்த தொடர் மூலம் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.

இதேபோன்று 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்க ஐசிசி தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கு முன்னேற்பாடு செய்யும் வகையில் தான் ஐசிசி அமெரிக்காவில் போட்டியை நடத்துகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதி வரை நடைபெறும்.அது முடிந்தவுடன் எந்த ஓய்வும் இன்றி வீரர்கள் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

Story first published: Saturday, July 29, 2023, 0:47 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+