Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கனவு லெவன் அணி எது? ஹர்ஷா போக்லே அணியில் கோலி, ரோகித்துக்கு இடமில்லை

மும்பை : 2024 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடியப்போகிறது. இந்த சூழலில் நடப்பாண்டில் சிறந்து விளையாடிய வீரர்களை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தேர்வு செய்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கனவு அணியாக அவர் தேர்வு செய்துள்ளார்.

இதில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். நடப்பாண்டில் 27 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1332 ரன்கள் அடித்திருக்கிறார்.

year ender 2024 india cricket team 2024 test team harsha bhogle

இதில் அவருடைய சராசரி 52க்கு மேல் இருக்கிறது. இதில் ஏழு அரை சதம் மூன்று சதம் அடங்கும். ஜெய்ஸ்வாலின் ஜோடியாக ஹர்ஷா போக்லே இங்கிலாந்து சேர்ந்த பெண் டக்கட்டை தேர்வு செய்திருக்கிறார். நடப்பாண்டில் ஆயிரத்து நூறு ரன்களுக்கு மேல் அடித்துள்ள பென் டக்கட் ஐந்து அரை சதம் அடித்துள்ளார்.

மூன்றாவது வீரராக நியூசிலாந்து அணியில் ஜாம்பவான் கேன் வில்லியம்சன்னை ஹர்ஷா தேர்வு செய்திருக்கிறார். நடப்பாண்டில் 18 இன்னிங்ஸ் விளையாடியுள்ள வில்லியம்சன், 101 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி கிட்டத்தட்ட 60 ஆகும். இந்த ஆண்டில் மட்டும் அவர் நான்கு சதம் அடித்திருக்கிறார். இதை அடுத்து ஹர்சா போக்லே, தனது டெஸ்ட் கனவு அணியில் நான்காவது வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டை தேர்வு செய்திருக்கிறார்.

31 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ஜோ ரூட் 1556 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 55க்கு மேல் இருக்கிறது. இதில் 5 அரை சதமும்,ஆறு சதமும் அடங்கும். இதனை அடுத்து ஹர்ஷா போக்லே, நம்பர் ஐந்தாவது வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி புருக்கை தேர்வு செய்திருக்கிறார். நடப்பு ஆண்டில் நான்கு சதம் மொத்தமாக 1100 ரன்கள், சராசரி 55 என ஹாரி புரூக் அபாரமாக விளையாடி இருக்கிறார்.நம்பர் ஆறாவது வீரராக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கமிண்டு மெண்டீசை ஹர்சா போக்லே தேர்வு செய்து இருக்கிறார்.

நடப்பாண்டில் 1049 ரன்கள் அடித்துள்ள கமிண்டு மென்டீஸ் 75 என சராசரி வைத்திருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் கமிண்டு மெண்டீஸ்,அவர் ஐந்து சதம் அடித்திருக்கிறார். நம்பர் ஏழாவது வீரராக பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வானை ஹர்ஷா போக்லே தேர்வு செய்திருக்கிறார். நம்பர் எட்டாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்லே, ஜடேஜா நடப்பாண்டில் மட்டும் 44 விக்கெட்டுகள், 500 ரன்கள் பேட்டிங்கில் அடித்திருப்பதாக பாராட்டியுள்ளார்.

இதேபோன்று மூன்று வேக பந்துவீச்சாளர்களாக ஹர்ஷா போக்லே, இங்கிலாந்து வீரர் கெஸ் ஆட்கின்சன் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா மற்றும் இந்திய வீரர் பும்ராவை தேர்வு செய்துள்ளார். ஹர்ஷா போக்லே அணியில் மூன்று இங்கிலாந்து வீரர், 3 இந்திய வீரர், இலங்கை தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு வீரர் இடம்பெற்றுள்ளனர். எனினும் ஹர்ஷா போக்லே அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.

Story first published: Wednesday, December 25, 2024, 18:46 [IST]
Other articles published on Dec 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+