For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2025ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்

மும்பை: 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டது. தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடர் சொந்த மண்ணில் நடைபெற்ற நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியது.

2025ஆம் ஆண்டில் இந்திய அணி மொத்தமாக 21 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது. இதில், 15 போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, 10 போட்டிகளில் விளையாடியது. இதில் நான்கு வெற்றிகள், ஐந்து தோல்விகள் மற்றும் ஒரு போட்டி டிரா ஆனது.

India cricket team

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணி மிகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியது. 14 போட்டிகளில் விளையாடி, 11 வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளுடன், 78.57 என்ற வெற்றி சதவீதத்தைப் பதிவு செய்தது. 2025இல் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைத்து வடிவங்களிலும் சில மறக்க முடியாத ஆட்டங்களை வெளிப்படுத்தினர். சர்வதேச கிரிக்கெட்டில் 2025ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களைக் காண்போம்.

5 அபிஷேக் ஷர்மா (859 ரன்கள்)

அபிஷேக் ஷர்மா ஒரே ஒரு ஃபார்மட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியபோதிலும், இந்த பட்டியலில் இடம் பிடித்தது இருக்கிறார். 2025ஆம் ஆண்டில் அவர் விளையாடிய 21 டி20 சர்வதேசப் போட்டிகளில், அபிஷேக் 42.95 சராசரியிலும், 193.46 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டிலும் 859 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த அதிரடி ஆட்டத்தில் ஏழு பவுண்டரிகளும், 13 சிக்ஸர்களும் அடங்கும். கொல்கத்தாவில் நடந்த தொடரின் முதல் டி20 போட்டியில் 34 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் மூன்று தொடர்ச்சியான அரை சதங்களை அடித்தார். மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்ததும் அவரது குறிப்பிடத்தக்க ஆட்டங்களில் ஒன்றாகும்.

4 ரவீந்திர ஜடேஜா (870 ரன்கள்)

அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2025இல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் நான்காவது இடத்தில் உள்ளார். அவர் விளையாடிய 20 போட்டிகளில் 62.14 சராசரியில் 870 ரன்கள் குவித்தார், இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில், 2025இல் 10 போட்டிகளில் பங்கேற்று, 63.66 சராசரியில் 764 ரன்கள் எடுத்தார்.

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக 107* ரன்களும், அகமதாபாத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 104* ரன்களும் எடுத்தார். பர்மிங்காம் மற்றும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதங்கள் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் அவர் 10 போட்டிகளில் 7 இன்னிங்ஸ் பங்கேற்று, 53 சராசரியில் 106 ரன்கள் எடுத்தார். இதில்ஐந்து முறை அவுட் ஆகாமல் இருந்தார்.

3 யஷஸ்வி ஜெய்ஸ்வால் (916 ரன்கள்)

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2025ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். அவர் விளையாடிய 14 போட்டிகளில் (23 இன்னிங்ஸ்) 41.63 சராசரியில் 916 ரன்கள் குவித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் புள்ளிவிவரங்களில் நான்கு சதங்களும், மூன்று அரை சதங்களும் அடங்கும்.

அவர் 2025இல் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 39.21 சராசரியில் 745 ரன்கள் எடுத்தார். லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள், பர்மிங்காமில் 87 ரன்கள் மற்றும் ஓவல் மைதானத்தில் 118 ரன்கள் எடுத்தார். டெல்லியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 175 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சார்பில் நான்கு போட்டிகளில் பங்கேற்று 171 ரன்கள் எடுத்தார். விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 121 பந்துகளில் 116* ரன்கள் எடுத்தது அவரது சிறந்த ஆட்டமாகும். அந்தப் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2 கே.எல். ராகுல் (1180 ரன்கள்)

அனுபவமிக்க பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், 2025இல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 24 போட்டிகளில் (30 இன்னிங்ஸ்), அவர் 47.20 சராசரியில் மொத்தமாக 1180 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சதங்களும், ஐந்து அரை சதங்களும் அடங்கும்.

2025இல் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 45.16 சராசரியில் 813 ரன்கள் எடுத்தார். லீட்ஸ் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் இங்கிலாந்துக்கு எதிராக முறையே 137 மற்றும் 100 ரன்கள் எடுத்தார். அகமதாபாத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 100 ரன்கள் அடித்ததும் அவரது சாதனைகளில் ஒன்று. ஒருநாள் போட்டிகளில், 14 ஆட்டங்களில் பங்கேற்று 52.42 சராசரியில் 367 ரன்கள் எடுத்தார். ராய்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 43 பந்துகளில் எடுத்த 66* ரன்கள் அவரது சிறந்த ஒருநாள் ஆட்டமாகும்.

1 சுப்மன் கில் (1764 ரன்கள்)

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், 2025ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக திகழ்கிறார். 35 போட்டிகளில் (42 இன்னிங்ஸ்) விளையாடி, 49 சராசரியில் 1764 ரன்கள் எடுத்தார். இந்த சாதனையில் ஏழு சதங்களும், மூன்று அரை சதங்களும் அடங்கும்.

2025இல் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 70.21 என்ற மிகச்சிறந்த சராசரியில் 983 ரன்கள் எடுத்தார். லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன்களும், அதைத் தொடர்ந்து பர்மிங்காமில் 269 மற்றும் 161 ரன்களும், மான்செஸ்டரில் 103 ரன்களும் எடுத்தார். டெல்லியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 129* ரன்கள் குவித்ததும் இதில் அடங்கும். ஒருநாள் போட்டிகளில், 11 ஆட்டங்களில் பங்கேற்று 49 சராசரியில் 490 ரன்கள் குவித்தார், இதில் இரண்டு சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் ஷுப்மன் கில் சற்றே சிரமப்பட்டார். 15 போட்டிகளில் 291 ரன்கள் மட்டுமே எடுத்தார், அவரது சிறந்த ஸ்கோர் 47 ரன்கள் ஆகும்.

Story first published: Friday, December 26, 2025, 12:35 [IST]
Other articles published on Dec 26, 2025
English summary
2025- Top 5 India Most run Getters in International cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+