லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில அணி திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை வெல்வார்கள் என அனைவராலும் கணிக்கப்பட்டு இருந்தும் முக்கியமான கட்டத்தில் பதற்றம் காரணமாக காலை வாரி விடுவார்கள்.அப்படி ஒரு அணி இருக்கிறது என்றால் அது தென்னாப்பிரிக்கா தான்.
ஆஸ்திரேலியாவுக்கு சரிசமமாக பலமான அணி என ரசிகர்களால் போற்றப்படும் தென் ஆப்பிரிக்க அணியில் பல ஜாம்பவான் வீரர்கள் இருந்தனர். வேகப்பந்து வீச்சு, பேட்டிங் என அனைத்திலும் பலமான அணியாக இருக்கும் தென்னாப்பிரிக்கா இதுவரை பெரிய ஐசிசி தொடரில் வென்றதே கிடையாது.

நிறவெறி கொள்கையை ஒழித்த காரணத்தை அடுத்து 1992 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணி நுழைந்தது. இந்த 34 ஆண்டுகளில் தென்னாபிரிக்க அணி ஒரே ஒருமுறைதான் 1999 ஆம் ஆண்டு ஐசிசி நாக் அவுட் கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன்பும், பின்பும் பல்வேறு வாய்ப்புகளை தென்னாப்பிரிக்க அணி கோட்டையை விட்டு இருக்கிறது.
1999 உலகக் கோப்பை ஆட்டத்தில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில், க்ளுஸ்னர் கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அடித்து போட்டியை சமன் செய்தார். இன்னும் நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் கைவசம் ஒரு விக்கெட் இருக்க ஒரு ரன் எடுத்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்தது.
ஆனால் அந்த பதற்றத்தைக் கூட கையாளத் தெரியாத தென்னாப்பிரிக்க அணியினர் ரன் அவுட் ஆகி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததோடு உலக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பையும் வீணடித்தன. இதேபோன்று பல உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்று வெளியேறிய தென்னாப்பிரிக்கா அணி t20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப் போட்டி வரை வந்து இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.
அதிலும் வெற்றி அருகே வந்து கடைசி கட்டத்தில் choke ஆகி விக்கெட் இழந்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணியை பலரும் chokers என்றுதான் அழைப்பார்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு புதிய தொடக்கத்தை கொடுத்திருக்கின்றது. பல தோல்விகளை மட்டுமே பெற்று வந்த அணிகள் முதல்முறையாக கோப்பையை வென்றிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி தென்னாபிரிக்க அணியும் அதே போல் தான் ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக கோப்பையில் வெல்ல முடியாமல் ஆர் சி பி அணி தவிர்த்தது. இந்த தொடருக்கு முன்பு மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவினார்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் அடுத்த இரண்டு வாரத்தில் தற்போது தென்னாபிரிக்க அணியும் தங்களுக்கு மீதான சாபத்தை முறியடித்து இருக்கிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு சோக்கர்ஸ் அணி என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.