Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீரை உள்ளேயே விடலை.. உருப்படியான இந்திய டி20 அணி அறிவிப்புக்கு காரணமே இதுதான் என கொண்டாட்டம்

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வை பார்த்து ரசிகர்கள் kondகொண்டாடி வருகின்றனர். ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கூறிய பல ஆலோசனைகள் ஏற்கப்பட்டு இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? வழக்கமாக அணித் தேர்வில் இந்திய அணி பயிற்சியாளரின் பங்கு முக்கியமாக இருக்கும். ஆனால், இம்முறை தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இல்லாமலேயே அணித் தேர்வு நடந்துள்ளது தான் இந்த "தரமான அணிக்கு" காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிசிசிஐ-யை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்

கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அணித் தேர்வில் அவரது தலையீடு அதிகமாக இருந்ததாக ஒரு பேச்சு அடிபட்டது. டி20-யை தவிர்த்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சந்தித்த தோல்விகள், குறிப்பாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களை கடுப்படைய வைத்திருந்தது.

2026 T20 World Cup Squad is good because BCCI Sidelines Gautam Gambhir says fans

இதன் உச்சக்கட்டமாக, சமீபத்திய தென்னாப்பிரிக்க டி20 தொடரில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்த சஞ்சு சாம்சனை ஓரம் கட்டிவிட்டு, ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை ஓப்பனிங் இறக்கியது, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது, சம்பந்தமே இல்லாமல் ஜித்தேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக சேர்த்தது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரிங்கு சிங்கை நீக்கியது என இந்த குளறுபடிகள் காரணமாக இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது.

"இனி இவரை நம்பினால் வேலைக்கு ஆகாது" என நினைத்ததோ என்னவோ, உலகக்கோப்பைக்கான அணித் தேர்வுக் கூட்டத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது. வழக்கத்திற்கு மாறாக, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கூட்டத்தில் பங்கேற்று அணியை இறுதி செய்துள்ளனர்.

கம்பீர் இல்லாத இந்தத் தேர்வில், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எதிர்பார்த்த அத்தனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஃபார்மில் இல்லாத சுப்மன் கில் மற்றும் ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் அதிகாரப்பூர்வ ஓப்பனராக உறுதி செய்யப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் கலக்கிய இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக உள்ளே வந்துள்ளார். ஃபினிஷர் ரிங்கு சிங் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த அணி அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள், "கம்பீர் தலையிடாததால் தான் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் கேட்ட கேள்விக்கு பிசிசிஐ சரியான பதில் அளித்துள்ளது. உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணி தான்" என ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Saturday, December 20, 2025, 15:05 [IST]
Other articles published on Dec 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+