Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்சர் படேல் வந்தாரு... அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்தாரு... அதுதான் அதுதான் அவரோட அதிரடி!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியின் மூலம் தனது 5வது டெஸ்ட் இன்னிங்சில் ஆடிய இந்திய ஸ்பின்னர் அக்சர் படேல் முதல் நாளான இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கடந்த 2வதுடெஸ்ட் போட்டியின்மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அக்சர் படேல் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

2 விக்கெட்டுகள்

2 விக்கெட்டுகள்

காயம் காரணமாக சென்னையில் நடைபெற்ற கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத அக்சர் படேல், இரண்டாவது போட்டியிலிருந்து ஆடி வருகிறார். இன்றைய போட்டி அவரது ஐந்தாவது இன்னிங்ஸ். இந்நிலையில் இன்றைய 5வது இன்னிங்சில் இதுவரை 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அக்சர்.

20 விக்கெட்டுகள்

20 விக்கெட்டுகள்

இதையடுத்து அவர் இதுவரை ஆடியுள்ள 5 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2வது போட்டியில் அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் தனது முதல் 5 விக்கெட்டுகள் சாதனையை இரண்டாவது இன்னிங்சில் ஏற்படுத்தினார்.

11 விக்கெட்டுகள்

11 விக்கெட்டுகள்

இதையடுத்து கடந்த பகலிரவு போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகள் சாதனையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்றைய தினம் அடுத்தடுத்து இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அக்சர்.

முறியடிப்பாரா அக்சர்?

முறியடிப்பாரா அக்சர்?

அவர் தொடர்ந்து இன்றைய இன்னிங்சிலும் 5 விக்கெட் சாதனையை ஏற்படுத்தினால் 4 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து 4 ஐந்து விக்கெட்டுகள் சாதனையை ஏற்படுத்திய அறிமுக வீரர் என்ற சாதனை அவருக்கு கிடைக்கும். மேலும் இந்த இறுதி டெஸ்ட்டில் 14 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினால் முன்னாள் வீரர் ஹிர்வானியின் முதல் 3 போட்டிகளில் 31 விக்கெட்டுகள் சாதனையையும் முறியடிக்கலாம்.

Story first published: Thursday, March 4, 2021, 13:01 [IST]
Other articles published on Mar 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+