Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் இந்திய அணி பெற்ற சாதனை வெற்றியின் தருணங்கள்...

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை வென்று, லாட்ஸ் மைதானத்தில் 28 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற சாதனையை தன்வசப்படுத்தியது இந்தியா. பிரதமர் நரேந்திரமோடியே இந்த வெற்றியை பாராட்டியுள்ளார் என்பதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். இந்த போட்டியின்போது லாட்சில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் படத்தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு...

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம்

இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அவரது புதிய பகையாளியான ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்படும் காட்சி. கடைசி விக்கெட்டாக ஆண்டர்சன் வீழ்ந்ததால் இந்த ரன் அவுட்தான் இந்தியாவின் வெற்றிக்கான தருணமாக அமைந்தது.

இதெல்லாம் சகஜமப்பா

இதெல்லாம் சகஜமப்பா

போட்டி முடிந்ததும், ஆண்டர்சனுக்கு நேசக்கரம் நீட்டும் ஜடேஜா. விளையாட்டில் சண்டையும், சச்சரவும் சகஜமப்பா என்பதைப்போல ஆண்டர்சனும் கைகொடுத்து வெளியேறுகிறார்.

நான்தான் டாப்பு

நான்தான் டாப்பு

2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கொத்தாக பறித்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 7வது விக்கெட் வீழ்ந்தபோது சக வீரர்களுடன் மகிழ்ச்சியை இப்படி பரிமாறிக்கொள்கிறார்.

நான்தான் அப்பவே சொன்னனே...

நான்தான் அப்பவே சொன்னனே...

ஷார்ட் பிட்ச் முறையில் பந்து போடுமாறு டோணி கூறிய அறிவுரையை பின்பற்றியதாலே அதிக விக்கெட் வீழ்த்த முடிந்ததாக போட்டிக்கு பிறகு இஷாந்த் ஷர்மா தெரிவித்தார். இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோது இஷாந்திடம், டோணி "நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல" என்று கேட்பதை போல உள்ளது இந்த படம்.

சிலம்பாட்ட ஜடேஜா

சிலம்பாட்ட ஜடேஜா

2வது இன்னிங்சில் அணியை சரிவில் இருந்து மீட்டு அரை சதத்தை கடந்த மகிழ்ச்சியை பேட்டை சிலம்பு போல சுற்றி கொண்டாடிய ரவீந்திர ஜடேஜா.

அடித்தளம் ஆழம்...

அடித்தளம் ஆழம்...

துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 95 ரன்கள் விளாசியது, இந்தியாவுக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. எனவேதான், மிடில் ஆர்டர் சரிந்தாலும், இந்தியாவால் 319 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க முடிந்தது.

ஹையோ.. ஹையோ..

ஹையோ.. ஹையோ..

ஆண்டர்சனை ரன் அவுட் செய்து இங்கிலாந்தின் 2வது இன்னிங்சுக்கு மங்களம் பாடிய மகிழ்ச்சியில், துள்ளி குதிக்கும் ரவீந்திர ஜடேஜா.

நானும் இருக்கேன்..

நானும் இருக்கேன்..

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது முழு திறமையையும் இந்த தொடரில் காண்பிக்கவில்லை என்றபோதிலும், இரு இன்னிங்சிலும், முக்கிய தருணங்களில் விக்கெட்டை வீழ்த்தினார்.

பதுங்கி பாய்ந்த இஷாந்த்

பதுங்கி பாய்ந்த இஷாந்த்

முதல் இன்னிங்சில் விக்கெட் எதையும் வீழ்த்தாத இஷாந்த் ஷர்மா 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடுகிறார்.

பவுலருன்னு யாரு சொன்னது

பவுலருன்னு யாரு சொன்னது

முதல் இன்னிங்சிலில் இந்திய தரப்பின் 2வது மிகப்பெரிய ஸ்கோராக 36 ரன்களையும், 2வது இன்னிங்சில் அரை சதத்தையும் கடந்த புவனேஸ்வர் குமார், இந்தியாவின் பார்வைக்கு ஆபத்பாண்டவராகவே தெரிந்தார்.

முதல் இன்னிங்ஸ் முத்து

முதல் இன்னிங்ஸ் முத்து

பந்து வீச்சுக்கு சாதகமான முதல் இன்னிங்சில் திறமையாக பேட்டிங் செய்து 103 ரன்களை எடுத்த ரகானேவுக்கும் இந்திய வெற்றியில் முக்கிய பங்கு உள்ளது.

முதல் இன்னிங்சின் சொத்து

முதல் இன்னிங்சின் சொத்து

இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் எடுத்து இஷாந்த் சாதித்தார் என்றால், முதல் இன்னிங்சில் புவனேஸ்வர் குமார் 6 விக்கெட்டுகளை அள்ளினார். கோஹ்லியுடன் தனது மகிழ்ச்சியை இப்படி பரிமாறுகிறார் புவனேஸ்வர் குமார்.

தங்க வாத்து முட்டை

தங்க வாத்து முட்டை

முக்கியமான 2வது இன்னிங்சில் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு வெளியேறினார் இந்திய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோஹ்லி. கிரிக்கெட்டை பொறுத்தளவில் முதல் பந்து முட்டை 'கோல்டன் டக்' என வர்ணிக்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 22, 2014, 18:20 [IST]
Other articles published on Jul 22, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+