Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ச்சே.. இந்த மேக்ஸ்வெல்தான் ஐபிஎல் அணிகளின் மேக்ஸிமம் டார்ச்சரப்பா...!

ஷார்ஜா: 7வது ஐபிஎல் தொடரில் கெய்ல் புயலைக் காணோம்... ஆனால் மேக்ஸவெல் சுனாமி பின்னி எடுத்துஎதிரணிகளுக்கு மேக்ஸிமம் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதற்கு முன்பு சோதா அணியாக இருந்து வந்தது. ஆனால் நடப்புத் தொடரில் கம்பீரமாக சீறிப் பாய்ந்து வருகிறது. காரணம், மேக்ஸ்வெல்.

ஆஸ்திரேலியரான கிளன் மேக்ஸ்வெல் போடும் போட்டால், அவரது பேட்டில் பட்டுப் பந்துகள் சிதறி ஓடுகின்றி, கதறித் துடிக்கின்றன. அந்த அடி அடிக்கிறார் மேக்ஸ்வெல்.

கதறக் கதற

கதறக் கதற

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நடந்த மோதலின்போது அந்த அணியின் பந்து வீச்சாளர்களைக் கதறக் கதற விரட்டியடித்தார் மேக்ஸ்வெல்.

வந்ததையெல்லாம் சிக்ஸருக்கு

வந்ததையெல்லாம் சிக்ஸருக்கு

வந்த பந்தையெல்லாம் பவுண்டரியைத் தாண்டி அவர் அடித்து விரட்ட ஸ்டேடியமே சிலிர்ததுப் போய் குதூகலித்தது.

உட்கார முடியலையே ப்ரீத்தியால்

உட்கார முடியலையே ப்ரீத்தியால்

பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தாவோ குதூகலித்துத் தத்தளித்தார். அவரால் உட்கார முடியவில்லை. நின்றபடியும், ஆடியபடியும், சந்தோஷித்தும், கூச்சல் போட்டிபடியும் மேக்ஸ்வெல் அடியை ரசித்துப் பூரித்தார்.

அமித் மிஸ்ரா பாவம்ய்யா

அமித் மிஸ்ரா பாவம்ய்யா

அமித் மிஸ்ராவின் பந்துகளைத்தான் மேக்ஸ்வெல் மேக்ஸிமம் பதம் பார்த்தார். அவர் எப்படிப் போட்டாலும் வெளுத்தார்.

அவருக்கு சிரிப்புத் தாங்கலே

அவருக்கு சிரிப்புத் தாங்கலே

தான் அடித்த அதிரடியைப் பார்த்து மேக்ஸ்வெல்லுக்கே ஒரு கட்டத்தில் சிரிப்பு தாங்க முடியவில்லை. அதிலும் மைதானத்தின் கூரைக்குப் போன சிக்ஸரால் புதுப் பந்தை எடுத்து அதையும் அதே போல மேலே தூக்கி அடித்தபோது அவருக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது.

அட.. சமி...

அட.. சமி...

அதை விட காமெடி என்னவென்றால் வேகப் பந்து வீச்சாளர் சமி போட்ட பந்தை அடித்து அது கேட்ச் ஆகி மேக்ஸ்வெல் அவுட் ஆகி விட்டார். கடைசியில் பார்த்தால் அது நோ பால். சமிக்கே தனது பந்து வீச்சை சகிக்க முடியவில்லை. வெறுப்பாகி விட்டார். மீண்டும் வந்த மேக்ஸ்வெல் மறுபடியும் ஹைதராபாத்தை பதம் பார்க்க ஆரம்பித்தார்.

43 பந்துகளில் 95 ரன்கள்

43 பந்துகளில் 95 ரன்கள்

இப்படியே அடித்து விளையாடி அரங்கத்தை அதிர வைத்த மேக்ஸ்வெல் கடைசியில் 43 பந்துகளில் 95 ரன்களைக் குவித்துத்தான் ஓய்ந்தார்.

2வது முறையாக 95 ரன்கள்

2வது முறையாக 95 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்க்ஸுடன் நடந்த முதல் போட்டியிலும் இப்படித்தான் போட்டுப் பொளந்தார் மேக்ஸ்வெல். அதிலும் 95 ரன்கள் குவித்தார்.

3 போட்டிகளிலும் 80க்கு மேல்

3 போட்டிகளிலும் 80க்கு மேல்

மேலும் 2வது போட்டியில் 89 ரன்களைக் குவித்தார் மேக்ஸ்வெல். இதன் மூலம் கலந்து கொண்ட 3 போட்டிகளிலும் அவர் 80க்கு மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

வீணாப் போன வார்னர்

வீணாப் போன வார்னர்

இத்தனைக்கும் நேற்று சொற்ப ரன்களில் அவுட்டாகியிருக்க வேண்டியவர் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல் கொடுத்த சக ஆஸ்திரேலியரான வார்னர் ஏனோ சரியாக பிடிக்காமல் சரிய விட்டு விட்டார். அது வெல்லுக்கு நல்லதாப் போச்சு.. பிரித்து மேய்ந்து விட்டார்.

13வது ஓவரில் 3 சிக்ஸ்

13வது ஓவரில் 3 சிக்ஸ்

13வது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 25 ரன்களைக் குவித்தது. அதேபோல 12வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு போரையும் எடுத்தார்.

பாலாஜி பிரமாதம்

பாலாஜி பிரமாதம்

பின்னர் ஹைதராபாத் பேட்டிங் செய்தபோது பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் பாலாஜி பிரமாதப்படுத்தி விட்டார். 4 ஓவர்களை வீசிய அவர் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களைச் சாய்த்தார்.

அட்டாக்கில் குதித்த ஷேவாக்

அட்டாக்கில் குதித்த ஷேவாக்

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஷேவாக் அதிரடியாக அடித்து ஆடினார். 3 சிகஸர்களுடன் அவர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 35 ரன்களைக் குவித்தார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 51 ரன்களைச் சேர்த்தனர்.

மேக்ஸ் வெல்லாக இருக்கும் வரை பிற அணிகளுக்குக் கஷ்டம்தான்...

Story first published: Wednesday, April 23, 2014, 11:36 [IST]
Other articles published on Apr 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+