Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோடி கணக்கில் ஏலம் போக உள்ள தமிழக வீரர்..!! சொற்ப ரன்களில் கர்நாடகாவை சுருட்டினார்..!!

திருவந்தனப்புரம்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் களமிறங்கியது.

பெரிய ஸ்கோர் அடித்து தமிழக அணிக்கு நெருக்கடி தரலாம் என கர்நாடக வீரர்கள் நினைத்தனர்

தொடக்கம்

தொடக்கம்

தொடக்க வீரராக களமிறங்கிய ரவிகுமார் டக் அவுட்டாகி வெளியேற, ஒன் டவுனில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் மனிஷ் பாண்டே, ரோகன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

மணிஷ் பாண்டே 40 ரன்களிலும், ரோஹன் 37 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, கர்நாடக அணி 105 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் அடுத்த 17 ரன்களில் சேர்ப்பதற்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் கர்நாடக இழக்க, 122 ரன்களில் சுருண்டது.

இளம்வீரர் அசத்தல்

இளம்வீரர் அசத்தல்

23 வயதான தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான அவர் 4 போட்டிகளில் 10 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் வரும் ஏலத்தில் கோடி ரூபாய்க்கு மேல் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவரை ஏற்கனவே கொல்கத்தா, டெல்லி அணிகள் வாங்கியும் பயன்படுத்தவில்லை. இதனால் இவரை மீண்டும் கைப்பற்ற இவ்விரு அணிகளும் போட்டி போடும்.

தமிழ்நாடு வெற்றி

தமிழ்நாடு வெற்றி

இந்த இலக்கை தமிழக அணி 28 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. அதிகபட்சமாக பாபா இந்தரஜித் 51 ரன்கள் அடித்தார். நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை தமிழக அணி வீழ்த்தியதன் முலம் தற்போது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி, விஜய் ஹசார கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களமிறங்கி உள்ளது.

Story first published: Thursday, December 9, 2021, 20:45 [IST]
Other articles published on Dec 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+