Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் இரட்டை மைல் கல்.. கபில்தேவாக மாறினார், கபில்தேவை முந்தினார்.. அஸ்வின் அமர்க்களம்

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் அதிகமுறை 5 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனையை அஸ்வின் முந்திவிட்டார்.

மும்பையில் நடைபெற்று வந்த இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்த சாதனையை அஸ்வின் இன்று நிகழ்த்தினார்.

டாசில் வென்ற இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 400 ரன்களில் ஆல்-அவுட்டானது. 112 ரன்களை விட்டுக்கொடுத்த, அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் சாதனை

முதல் இன்னிங்சில் சாதனை

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பென் ஸ்டோக்கை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தபோது அவர் 5வது விக்கெட்டை எட்டினார். இதன் மூலம் கபில்தேவ் சாதனையை அஸ்வின் சமன் செய்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 23 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தவர் கபில்தேவ். அதை அஸ்வினும் சாதித்து காட்டியிருந்தார்.

2வது இன்னிங்ஸ் சிறப்பு

2வது இன்னிங்ஸ் சிறப்பு

இந்நிலையில் 2வது இன்னிங்சிலும் அஸ்வின் அபாரமாக ஆடி, 55 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் பந்தில் அடில் ரஷித், ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியபோது, அஸ்வின் 5வது விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அப்போதே, கபில் தேவ் சாதனையை கடந்து, 24 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரரானார் அஸ்வின்.

இரு இன்னிங்சுகளிலும் அசத்தல்

இரு இன்னிங்சுகளிலும் அசத்தல்

கடைசி விக்கெட்டாக ஆண்டர்சனையும் அஸ்வின் வீழ்த்தி இரு இன்னிங்சுகளிலும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார் அஸ்வின். உலக அளவில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை கடந்தவர் டென்னிஸ் லில்லி. அவர் 48 டெஸ்டுகளில் இந்த மைல் கல்லை எட்டியிருந்தார். அஸ்வின் தனது 43வது டெஸ்டில் 247 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். எனவே அடுத்த டெஸ்டிலேயே டென்னிஸ் லில்லி சாதனையை அஸ்வின் முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இரட்டை குழல் துப்பாக்கிகள்

இரட்டை குழல் துப்பாக்கிகள்

இந்த தொடர் முழுக்க பேட்டிங்கில் விராட் கோஹ்லியும், பந்து வீச்சில் அஸ்வினும், இங்கிலாந்துக்கு பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்கள். இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜாம்பவான்கள்

இந்திய ஜாம்பவான்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 35 முறை கும்ப்ளேவும், ஹர்பஜன் சிங் 25 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அஸ்வின் அதை எளிதில் கடந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, December 12, 2016, 11:05 [IST]
Other articles published on Dec 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+