இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
லாகூர்: நாளை நடக்கும் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் 25 ஏக்கர் விளை நிலம் வழங்கப்படும் என்று அந்நாட்டில் உள்ள பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவை தோற்கடித்தால் ஒவ்வொரு வீரருக்கும் எனது அரசு 25 ஏக்கர் விளை நிலம் பரிசாக அளிக்கும். உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி பாராட்டிற்குரியது. அவர்கள் வெற்றி பெற பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்தியாவுடன் மோதுவதால் டென்ஷனாக வேண்டாம் என்றார்.
நாளை மொகாலியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடக்கிறது. நாளைய ஆட்டத்தை இரண்டு நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications