Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தம் 26 பேர்.. ஐபிஎல் அணிகளை கழட்டிவிட்ட முன்னணி அயல்நாட்டு வீரர்கள்.. கோபத்தில் நிர்வாகங்கள்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் சில வாரங்கள், முற்றிலும் விலகல் என 26 அயல்நாட்டு வீரர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

Recommended Video

IPL 2022 முடிந்த பின் அடுத்த Captain குறித்து BCCI முடிவெடுக்கும் - Ravi Shastri தகவல்

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மும்பை, புனே நகரங்களில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை 10 அணிகள் என்பதால், மெகா ஏலம் முதல் ஆட்ட விதிமுறைகள் வரை பிரமாண்ட முறையில் பிசிசிஐ மாற்றம் கொண்டு வந்துள்ளது.

 கைவிட்ட அயல்நாட்டு வீரர்கள்

கைவிட்ட அயல்நாட்டு வீரர்கள்

ஆனால் வழக்கம் போல இந்தாண்டும் அயல்நாட்டு வீரர்கள் தொடக்கத்திலேயே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். லேட்டஸ்டாக சென்னை அணி வீரர் மொயீன் அலி குறைந்தது ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தை தவறவிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. விசா பிரச்சினை காரணமாக அவரால் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஐபிஎல்-ல் இருந்து வெளியேறிவிட்டனர்.

என்ன காரணம் ?

என்ன காரணம் ?

சர்வதேச அளவில் தற்போது மூன்று மிக முக்கிய கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் தான் அயல்நாட்டு வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து : இரு அணிகளுக்கும் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இது மார்ச் 28ம் தேதியன்று தான் முடியும் என்பதால், இரு நாட்டு வீரர்களும் அதன் பின்னர் தான் இந்தியா வருவார்கள்.

பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா : ஐபிஎல் தொடரில் ஆஸி, வீரர்கள் அதிகம். ஆனால் தற்போது அவர்கள் பாகிஸ்தானுடன் டெஸ்ட், 50 ஓவர் கிரிக்கெட், டி20 என நெடுந்தொடரில் இருக்கின்றனர். இந்த தொடர் வரும் ஏப்ரல் 5ம் தேதிதான் முடிவடையும்.

தென்னாப்பிரிக்கா vs வங்கதேசம்: இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர் வரும் ஏப்ரல் 12ம் தேதி தான் முடிவடையும்.

26 வீரர்களின் விவரம்

26 வீரர்களின் விவரம்

ஐபிஎல் தொடரை தவறவிடும் அயல்நாட்டு வீரர்களின் விவரங்களை ஒவ்வொரு அணி வாரியாக பார்க்கலாம்.

சிஎஸ்கே - ( டுவைன் பிரிட்டோரியஸ்) , மும்பை இந்தியன்ஸ் - ( ஜோஃப்ரா ஆர்ச்சர் ), கொல்கத்தா - ( பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் ), ராஜஸ்தான் ராயல்ஸ் - ( ராஸி வாண்டர் டுசன்) , ( ஐதராபாத் அணி - மார்கோ ஜேன்சன், சீன் அப்போட், எய்டன் மர்க்கரம் ), டெல்லி கேப்பிடல்ஸ் - ( முஸ்திவிசூர் ரஹ்மான், லுங்கி இங்கிடி, ஆன்ரிக் நார்ட்ஜே, வார்னர், மிட்செல் மார்ஷ் ), பெங்களூரு அணி - ( ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், மேக்ஸ்வெல், ஜோஸ் ஹேசல்வுட் ), பஞ்சாப் கிங்ஸ் - பேர்ஸ்டோ, ரபாடா, நாதன் எல்லீஸ் ), லக்னோ அணி - ( மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹோல்டர், கெயில் மேயர், மார்க் வுட், டிக்காக் ), குஜராத் அணி - ( டேவிட் மில்லர், அல்சாரி ஜோசஃப் )

அதிருப்தியில் ஐபிஎல் அணிகள்

அதிருப்தியில் ஐபிஎல் அணிகள்

அனைத்து ஒப்பந்தங்களும் போட்டப்பட்ட பின்னரும் அயல்நாட்டு வீரர்கள் இதுபோன்று கடைசி நேரத்தில் கழட்டிவிடுவது சரியில்லை என ஐபிஎல் அணி நிர்வாகங்கள் கடும் அதிருப்தியில் உள்ளது. மேலும் இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Story first published: Wednesday, March 23, 2022, 21:17 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+