Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 விக்கெட் சாதனை... 28வது முறையா செஞ்சிருக்காரு... சொந்த மண்ணில் சாதனை புரிந்த அஸ்வின்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து ஆடி முடித்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தனது ஆட்டத்தை முடித்துள்ளது.

இந்திய ஸ்பின்னர் ரவி அஸ்வின் அதிரடியாக இந்த இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் தனது 28வது 5 விக்கெட்டுகள் சாதனையை செய்துள்ளார் அஸ்வின்.

இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸ்

இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி முடித்துள்ளது. முதல் இன்னிங்சில் அதிரடியாக 578 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சின் முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை இழந்தது.

இந்தியாவிற்கு 420 ரன்கள் இலக்கு

இந்தியாவிற்கு 420 ரன்கள் இலக்கு

தொடர்ந்து அந்த அணியின் அடுத்தடுத்த வீரர்கள் அவுட்டான நிலையில் 178 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆகியுள்ளனர். இதையடுத்து இந்திய அணிக்கு 420 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் தங்களின் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளனர்.

பாதகமான சூழல்

பாதகமான சூழல்

இன்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடத்துவங்கிய இங்கிலாந்து அணிக்கு மிகவும் பாதகமான சூழலே காணப்பட்டது. அடுத்தடுத்து அந்த அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் ரவி அஸ்வின். முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 2வது இன்னிங்சில் ஆர்ச்சர், ஆன்டர்சன் உள்ளிட்ட 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சொந்த மண்ணில் சாதனை

சொந்த மண்ணில் சாதனை

இந்நிலையில் தனது 28வது 5 விக்கெட்டுகள் சாதனையை அஸ்வின் தனது சொந்த மண்ணில் நிகழ்த்தியுள்ளார். இதுவரை 28 முறை அவர் 5 விக்கெட்டுகளை சர்வதேச அளவில் வீழ்த்தியுள்ளார். 386 விக்கெட்டுகளை அவர் மொத்தமாக வீழ்த்தியுள்ளார். மேலும் 4 சதங்களையும் அடித்துள்ளார்.

Story first published: Monday, February 8, 2021, 17:39 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+