Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங்கிலும் தெறிக்கவிட்ட இந்தியா.. திணறிய இலங்கை.. இரண்டாம் நாள் என்ன நடந்தது?

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து வலுவாக இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதன்பின் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே திணறியது.

இந்திய அணியின் பேட்டிங்கை போலவே பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை வீரர்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

முதல் நாள் போட்டி

முதல் நாள் போட்டி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் முறை கோஹ்லி நீண்ட நாட்களுக்கு பின் டாஸ் வெற்றி பெற்று இருக்கிறார்.

முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முரளி விஜய் மிகவும் சிறப்பாக விளையாடி 155 ரன்கள் எடுத்தார். கே.எல் ராகுலுக்கு பதிலாக களம் இறங்கிய தவான் 23 ரன்களில் அவுட் ஆனார். கோஹ்லியும் விஜயுடன் சேர்ந்து செஞ்சுரி அடித்தார்.

சாதனை மன்னன்

சாதனை மன்னன்

இரண்டாம் நாள் போட்டியிலும் தொடக்கத்தில் இருந்து மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 287 பந்துகளில் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 6வது இரட்டை சதம் ஆகும். இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடிக்கிறார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதம் விளாசிய ஒரே கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.

இந்திய அணி டிக்ளேர்

இந்திய அணி டிக்ளேர்

கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்துள்ளது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது. புகை காரணமாக போட்டி பல முறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

சொதப்பலான தொடக்கம்

சொதப்பலான தொடக்கம்

இலங்கை அணி பேட்டிங் தொடக்கத்திலேயே சொதப்பியது. முதல் பந்திலேயே இலங்கையின் திமுத் கருணாரத்னி டக் அவுட் ஆனார். இலங்கை அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து இருக்கிறது. முகமது சமி, ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். இலங்கை இந்தியாவை விட 405 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

Story first published: Sunday, December 3, 2017, 17:27 [IST]
Other articles published on Dec 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+