Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பவுலிங்கில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. கெத்து காட்டிய பும்ரா.. தெறிக்கவிட்ட 2வது நாள்!

ஜோஹன்ஸ்பர்க்: இந்தியா தென்னாப்பிரிக்கவிற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. நினைத்தது போல இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

தற்போது 3வது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடக்கிறது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இந்த போட்டியில் இந்தியா பேட்டிங்கில் சொதப்பியது. தற்போது தென்னாப்பிரிக்க அணியும் மோசமாக ஆடியுள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இந்தியா இந்த போட்டியில் டாஸ் வென்று இருக்கிறது. கோஹ்லி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஓப்பனிங் இறங்கினார்கள். ஆனால் இந்த முறையும் பேட்டிங் சொதப்பியது. வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள். கோஹ்லி அதிகமாக 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவு

முதல் நாள் முடிவு

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் மட்டும் எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா ஆடி வருகிறது. ஆனால் அந்த அணியின் மார்க்ராம் புவனேஷ்வர்குமார் பந்தில் தொடக்கத்திலேயே அவுட் ஆனார். தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

அதற்கு அடுத்து இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியும் மோசமாக பேட்டிங் செய்தது. வரிசையாக அனைத்து வீரர்களும் அவுட் ஆனார்கள். அம்லா மட்டும் அதிகமாக 61 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நாள் முடிவு

நாள் முடிவு

நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 1 விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்துள்ளது. இந்தியாவின் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்தார். புவனேஷ்வர்குமார் 3 விக்கெட் எடுத்தார்.

Story first published: Thursday, January 25, 2018, 21:45 [IST]
Other articles published on Jan 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+