டோணியின் இடது கை வழியாக வழிந்த அதிருஷ்டம்!
இந்தூர்: தொடர்ந்து 3 போட்டிகளில் டாசில் தோற்ற டோணிக்கு, இம்முறை அதிருஷ்டம் அவரது இடது கை வழியாக வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களிலும், முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணி கேப்டன் டோணி, டாஸில் தோற்றார். அப்போட்டிகளிலும் இந்தியா தோல்வியே அடைந்தது.

அணி வெற்றியில் டாஸ் முக்கிய பங்காற்றிய நிலையில், டாசில் வெற்றிபெற டோணி ஒரு ஐடியா செய்தார். இன்றைய இரண்டாம் ஒருநாள் போட்டியின்போது, டாஸ் நாணயத்தை சுழற்றும்போது, இடது கையால் அதை செய்தார்.
அவர் எதிர்பார்த்தபடியே இம்முறை டாசில் இந்தியா வென்றது. உடனடியாக முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் டோணி.
Story first published: Wednesday, October 14, 2015, 15:44 [IST]
Other articles published on Oct 14, 2015


Click it and Unblock the Notifications