Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழி தீர்த்த இந்தியா.. 2வது ஒருநாள் போட்டியில் இலங்கையை ஓடவிட்டு அடித்து வென்றது!

மொஹாலி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது.

ரோஹித் சர்மாவின் இரட்டை சதம், பந்து வீச்சாளர்களின் அதிரடி என இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடியது. முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்ததற்கு இந்தியா இந்த போட்டியின் மூலம் பழி தீர்த்து இருக்கிறது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்து உள்ளது.

டாஸ் வென்ற இலங்கை

டாஸ் வென்ற இலங்கை

இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது.இந்திய கேப்டன் கோஹ்லி திருமணத்திற்காக ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடந்தது. இதனால் இலங்கை தொடரில் முன்னிலை வகித்தது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

அதிரடியாக ஆடிய இந்தியா

அதிரடியாக ஆடிய இந்தியா

இந்த போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. குல்தீப் யாதாவிற்கு பதிலாக இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் இறங்கிய இந்தியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. தவான் அதிரடியாக ஆடி 68 ரன்கள் எடுத்தார். அதேபோல் இளம் வீரர் ஸ்ரேயேஸ் ஐயர் 88 ரன்கள் எடுத்தார். இது ஸ்ரேயேஸ் ஐயரின் முதல் அரைசதம் ஆகும்.

ரோஹித் சாதனை

ரோஹித் சாதனை

இந்த போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 153 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தார். 13 பவுண்டரிகளும் 12 சிக்ஸ்களும் அடித்தார். ஐசிசி ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்து ரோஹித் சர்மா சாதனை புரிந்துள்ளார். கடைசி 100 ரன்களுக்கு வெறும் 35 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல் கேப்டனாக இதுவரை 200 ரன்களை கடந்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. இந்திய அணி பேட்டிங் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.

சொதப்பிய இலங்கை

சொதப்பிய இலங்கை

இலங்கை அணியின் பேட்டிங் தொடக்கத்திலேயே சொதப்பியது. இலங்கையின் மேத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 111 ரன்கள் எடுத்தார். சாஹல் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 393 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 50 ஓவருக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்து உள்ளது.

Story first published: Wednesday, December 13, 2017, 19:34 [IST]
Other articles published on Dec 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+