Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டி-20 போட்டி.. இலங்கையை காலி செய்த இந்தியா... தொடரை வென்று வெற்றிக் கொடி நாட்டியது!

இந்தூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி தற்போது மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள 'ஹோல்கர்' மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது.ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது போலவே டி-20 தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டி

இந்த வருடம் நடக்கும் கடைசி கிரிக்கெட் தொடர் என்பதால் இது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும் இது. இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் வென்றால் இந்தியா தொடரை வென்றுவிடும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது.

ரோஹித் சதம்

ரோஹித் சதம்

கேப்டன் ரோஹித் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 43 பந்துகள் பிடித்த இவர் 10 சிக்ஸ்களும், 12 பவுண்டரிகளும் அடித்து 118 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய இவர் சமீரா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவர் தனது 100 ரன்னை வெறும் 35 பந்தில் அடித்தார். இதன் மூலம் டி-20ல் அதிவேக சதமான டேவிட் மில்லரின் சதம் சாதனையை சமன் செய்து இருக்கிறார். இது டி-20 போட்டியில் ரோஹித் சர்மாவின் இரண்டாவது சதம் ஆகும். அதேபோல் இந்திய கேப்டன் ஒருவர் டி-20 போட்டியில் அடிக்கும் முதல் சதம் ஆகும்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய பேட்டிங் இதில் அபாரமாக இருந்தது. ரோஹித் போலவே லோகேஷ் ராகுல் 49 பந்தில் 8 சிக்ஸ் அடித்து 89 ரன் எடுத்தார். பேட்டிங் அதிரடியால் இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது.டி-20 போட்டியில் இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது. இதற்கு முன்பு 2016ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா 244 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. மேலும் டி-20 போட்டிகளால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகப்படச ஸ்கோர் ஆகும் இது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

பேட்டிங் போலவே பவுலிங்கும் சிறப்பாகவே இருந்தது. இலங்கை அணி அதிரடியாக ஆடினாலும் வரிசையாக விக்கெட் விழுந்தது. சாஹல் அதிரடியாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். குல்தீப் 3 விக்கெட் எடுத்தார். ஜெயதேவ், பாண்டியா தலா 1 விக்கெட் எடுத்தனர். இலங்கையில் அதிகபட்சமாக பெரேரா 77 ரன்கள் எடுத்தார். 261 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஏஞ்சலோ மெத்தியூஸ் ரிட்டயர் ஹர்ட் செய்தார். மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என வென்றுள்ளது

Story first published: Friday, December 22, 2017, 22:58 [IST]
Other articles published on Dec 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+