Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: ராகுல் சதம் உதவியுடன் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கே.எல்.ராகுலின் சதம், கோஹ்லி, ரோகித் ஷர்மாவின் சிறப்பான பங்களிப்பு உதவியுடன் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. முன்னதாக இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன.

முதல் டெஸ்டில் தோல்வி

முதல் டெஸ்டில் தோல்வி

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடும் இந்திய அணி, காலே நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை 63 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. இவ்விரு அணிகளுக்கு நடுவேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

3 மாற்றங்கள்

3 மாற்றங்கள்

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதிலாக முரளி விஜயும், முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுக்க தவறிய ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியும், ரன்களை வாரிக் கொடுத்த வருண் ஆரோனுக்கு பதிலாக, உமேஷ் யாதவும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியில் காயமடைந்த நுவான் பிரதீப்புக்கு பதிலாக துஸ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

முரளி விஜய் டக்-அவுட்

முரளி விஜய் டக்-அவுட்

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் பிரசாத் பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ரஹானே 4 ரன்களிலேயே நடையை கட்டினார். இதனால் இந்திய அணி, 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கைகொடுத்த கோஹ்லி

கைகொடுத்த கோஹ்லி

அந்த நேரத்தில்தான், தொடக்க வீரர் ராகுலும், கேப்டன் கோஹ்லியும், அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோஹ்லி அதிரடியாக ஆடிய நிலையில், ராகுல் முதலில் பொறுமையாகவும் பின்னர் அதிரடியாகவும் ஆடினார்.

ராகுல் சதம்

ராகுல் சதம்

78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஸ்லிப்பில் பிடித்த அபாரமான கேட்சால் கோஹ்லி நடையை கட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் சதம் அடித்தார். இருப்பினும் சமீரா வீசிய பவுன்சரில் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து 108 ரன்களில் வெளியேறினார்.

ரோகித் ஷர்மா அருமை

ரோகித் ஷர்மா அருமை

கடந்த போட்டியின் 2 இன்னிங்சுகளிலும் சொதப்பிய ரோகித் ஷர்மா இன்று தனது வழக்கமான டிரேட்மார்க் ஷாட்டுகளுடன் 79 ரன்கள் எடுத்து அணிக்கு கை கொடுத்து, ஆட்ட நேரம் முடியும் தருவாயில் எல்பிடபிள்யூ ஆனார். எதிர்பார்க்கப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி 10 ரன்களில் வெளியேறினார்.

319 ரன்கள் குவிப்பு

319 ரன்கள் குவிப்பு

ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கண்டுள்ளது. அஸ்வின் களமிறங்க வேண்டிய நிலையில், விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா 19 ரன்களுடனும் களத்திலுள்ளார்.

சங்ககாராவுக்கு கடைசி போட்டி

சங்ககாராவுக்கு கடைசி போட்டி

இப்போட்டியோடு இலங்கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சங்ககாரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலக கோப்பையோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சங்ககாராவுக்கு இப்போட்டிதான் கடைசி சர்வதேச போட்டியாக அமையப்போகிறது.

Story first published: Thursday, August 20, 2015, 18:18 [IST]
Other articles published on Aug 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+