Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 214 ரன்களில் சுருட்டிய இந்தியா பேட்டிங்கிலும் பதிலடி!

பெங்களூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய சுழல் தாக்குதலில் சிக்கி சிதறுண்ட தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 214 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.

மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், பெங்களூரில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

2nd Test: India win toss, opt to bowl; Ishant, Binny included

கடந்த சில நாட்களாக பெங்களூரில் மழை பெய்துவந்ததும், ஈரப்பத வானிலையும் இந்த முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது. இந்திய அணியில் அமித் மிஸ்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, பதிலாக, இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில், டேல் ஸ்டெயின், வெர்னான் பிளான்டர், சிமன் ஹார்மர் ஆகியோர் விலகியுள்ள நிலையில், டுமினி, மோர்கல், கெய்ல் அப்பார்ட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் இன்னிங்சில், 59 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி, நண்பகல் தாண்டுவதற்குள், 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

100வது டெஸ்ட் போட்டியில் ஆடும், தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர், டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இந்திய தரப்பில், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வருண் ஆரோன் 1 விக்கெட்டை வீழ்த்தினார். அப்பாட் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்திய அணி, தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்தியா, விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 28 ரன்களுடனும், தவான் 45 ரன்களுடனும் களத்திலுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சுகளிலும் டக் அவுட்டான தவான், இன்றைய போட்டியில் சிறப்பாக பேட் செய்ததை பார்க்க முடிந்தது.

தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்காவைவிட இந்தியா 134 ரன்கள் பின்னிலையிலுள்ளது. ஆட்டத்தில் இன்னும் நான்கு நாட்கள் எஞ்சியுள்ளன.

Story first published: Saturday, November 14, 2015, 17:24 [IST]
Other articles published on Nov 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+