Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி அதிரிபுதிரி.. ஜெயந்த் அடடா... 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 405 ரன்கள் டார்கெட்

விசாகப்பட்டனம்: விசாகப்பட்டனம் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற அந்த அணிக்கு 405 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இன்றைய போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கை, இங்கிலாந்தின் பவுலிங் வீழ்த்தியது. ஸ்டூவர்ட் பிராட், அதில் ரஷீத் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

2nd Test: Spirited Kohli-Jayant help India post steep target of 405 against England

தற்போது இங்கிலாந்து வெற்றி பெற 150 ஓவர்களில் 405 ரன்களை எடுத்தாக வேண்டும். இந்தியா 150 ஓவர்களுக்குள் 10 விக்கெட்களைச் சாய்த்தாக வேண்டும். இந்திய மண்ணில் இதுவரை எந்த அணியும் 405 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் 387 வரைக்கும்தான் இந்தியாவில் சேஸ் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் விக்கெட்களை படு வேகமாக இழந்தது. மொத்தமாக 7 விக்கெட்களை இந்தியா பறி கொடுத்தது. நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்ற நிலையில் இருந்தது. ரஹானா 26, கோஹ்லி 81 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 77 ரன்களைச் சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் ஜெயந்த் யாதவ் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேரத்தில் ஜெயந்த் ஆடிய விதம் இந்தியாவுக்கு பேருதவியாக இருந்தது.

Story first published: Sunday, November 20, 2016, 13:08 [IST]
Other articles published on Nov 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+