
சவால்கள்
இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். இல்லை என்றால், தோல்வி அடையும் அணிக்கு எஞ்சிய 4 போட்டிகளும் வாழ்வா சாவா என்ற போட்டியாக மாறிவிடும். இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று பெரிய சவால்கள் காத்து கொண்டு இருக்கிறது. இதனை இந்தியா சமாளித்தாலே போட்டியை வென்றுவிடலாம்.

ஷாகின் ஆப்ரிடி
முதல் பெரிய சவால் என்றால் ஷாகின் ஆப்ரிடி தான். ஷாகின் ஆப்ரிடியின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் விழாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடந்த முறை இவரது பந்துவீச்சில் ரோகித்தும், ராகுலும் ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீரர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் இன்று பவர்பிளேவில் விக்கெட் விழாமல் அதிரடியாக விளையாட வேண்டும்.

பாகிஸ்தான் தொடக்க ஜோடி
இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி அளிக்க கூடியவர்கள் என்றால், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தான். இந்த ஜோடியை இந்திய அணி எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறதோ, அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நல்லது. ஏனென்றால் ஆட்டத்தின் போக்கையே இந்த ஜோடி மாற்ற கூடியவர்கள். கடந்த முறை இந்தியா நிர்ணயித்த இலக்கை இந்த ஜோடியே தனி ஆளாக நின்று காப்பாற்றியது.

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள்
கடந்த முறை இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தடுமாறினர் இதனால், இம்முறை பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், இல்லையெனில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். இதே போன்று இந்திய நடுவரிசை வீரர்களும் அதிரடியாக ஆடி ரன்களை அதிகப்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications