Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது துரோகம்.. இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்.. டாஸ் போச்சு.. மிகவும் தவறான முடிவு

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் தொடங்குகிறது.

Recommended Video

AsiaCup 2022 தொடரில் India அணிக்கு பாரபட்சமா? Pakistan முன்னாள் வீரர்கள் கேள்வி *Cricket

ஏற்கனவே குரூப் சுற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், தற்போது பழித்தீர்க்கும் முனைப்பில் போபர் அசாம் படை களமிறங்கியுள்ளது.

துபாய் ஆடுகளம், கடந்த சில போட்டிகளாக ரன் குவிப்புக்கு சாதகமாக செயல்படுகிறது. இரு அணிகளிலும் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் விலகியயதால், இரண்டு அணிக்குமே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டாஸ்

டாஸ்

இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக தெரிவித்தார். ஆடுகளத்தில் இரவு நேரத்தில பனிப் பொழிவு இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த பாபர் அசாம், கடந்த முறை இந்தியாவுடன் மோதிய போது பல நல்ல அம்சங்கள் தென்பட்டதாகவும், இன்றைய ஆட்டத்திலும் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாட உள்ளோம் என்று கூறினார்.

ரோகித் சர்மா கருத்து

ரோகித் சர்மா கருத்து

தஹானி காயம் காரணமாக விலகியுள்ளதால் ஹஸ்னாயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாபர் அசாம் கூறினார். டாஸ் இழந்தது குறித்து பேசிய ரோகித் சர்மா, பந்துவீச தான் நாங்களும் முடிவு செய்து இருந்தோம். தற்போது பேட்டிங் செய்ய உள்ளோம். இதனால் அதிரடியாக விளையாடி நல்ல இலக்கை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

3 மாற்றம்

3 மாற்றம்

பிளேயிங் லெவனை தேர்வு செய்வது உண்மையில் தலைவலியாக இருந்தது. இந்திய அணியின் இன்று 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார். தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ரவி பிஸ்னாய் இன்றைய போட்டியில் விளையாடுகிறார் என்று ரோகித் கூறினார். இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி, 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6,ரிஷப் பண்ட், 7. தீபக் ஹூடா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ரவி பிஸ்னாய், 11, சாஹல்

பாகிஸ்தான் அணி 1,பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் சமான், 4, ஆசிஃப் அலி, 5,இஃப்திகார் அகமது, 6, குஸ்தில் ஷா, 7, ஷதாப் கான், 8, முகமது ஹஸ்னாயின், 9, முகமது நவாஸ், 10,ஹரிஸ் ராஃப், 11, நஷிம் ஷா

Story first published: Sunday, September 4, 2022, 19:30 [IST]
Other articles published on Sep 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+