Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 - பிளேயிங் லெவனில் 3 மாற்றம்.. ரோகித் சர்மா எடுத்த முடிவு

அமெரிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்படுகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி திங்கட்கிழமை தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கடைசி 2 டி20 போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனால் நடப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு கடைசி 2 ஆட்டத்திலும் வாய்ப்பு வழங்க ரோகித், டிராவிட் கூட்டணி முடிவு எடுத்துள்ளது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இன்றைய ஆட்டத்தில் தொடர்ந்து டி20 போட்டியில் சொதப்பி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் சஞ்சு சாம்சனின் ஷாட் தேர்வு பொருத்தமாக இருக்கும் என்பதால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஹர்சல் பட்டேல்

ஹர்சல் பட்டேல்

இதே போன்று கடந்த சில போட்டிகளால் ஓய்வில் இருந்த ர்சல் பட்டேலுக்கு, கடைசி 2 டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் ஹர்சல் பந்துவீசும் நிலையில், லாடர்ஹில் ஆடுகளம் தொய்வாக இருக்கும் என்பதால், ஹர்சல் பட்டேலுக்கு இது நல்ல ஏற்ற சூழலாக விளங்கும். இதனால் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு ஹர்சலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இந்த நிலையில், பிளேயிங் லெவனில் சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. குல்தீப் யாதவின் சுழல், நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். எதிரணி விக்கெட்டுகளை கொத்தாக இவர் வீழ்த்த கூடியவர் என்பதால், ரோகித் குல்தீப்பை வைத்தும் யுத்தியை அமைக்கலாம்

பிளேயிங் லெனில்

பிளேயிங் லெனில்

1, ரோகித் சர்மா, 2, சூர்யகுமார் யாதவ், 3, தீபக் ஹூடா, 4, சஞ்சு சாம்சன். 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, ஜடேஜா, 8, ஹர்சல் பட்டேல், 9, புவனேஸ்வர் குமார். 10, ஆர்ஸ்தீப் சிங், 11, குல்தீப் யாதவ் / அஸ்வின் / பிஸ்னாய்

Story first published: Saturday, August 6, 2022, 17:08 [IST]
Other articles published on Aug 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+