Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை பார்த்து காப்பி அடிக்கும் ஆஸி.. டேவிட் வார்னர் நாளை இருப்பாரா ? 3 மாற்றத்திற்கு வாய்ப்பு

மும்பை : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்தியாவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலியா டெல்லியில் நாளை களமிறங்குகிறது. இதனிடையே நாளை பயன்படுத்தப்படும் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகிகள் சோதித்து பார்த்தார்கள்.

முதல் போட்டியில் சொதப்பியதால் இரண்டாவது டெஸ்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

வார்னர் இருப்பாரா?

வார்னர் இருப்பாரா?

குறிப்பாக அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நாளை களமிறங்குவாரா இல்லை அவர் அதிரடியாக நீக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் பாட் கம்மின்ஸ், நான் தேர்வு குழுவில் இல்லை. டேவிட் வார்னரிடம் எந்தத் தேர்வு குழு உறுப்பினரும் அவருடைய ஆட்டம் குறித்து இதுவரை பேசவில்லை. ஆனால் கண்டிப்பாக நாளை டேவிட் வார்னர் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதிரடி

அதிரடி

நீங்கள் கடந்த ஆண்டு பாக்சிங் டே போட்டியில் பார்த்திருக்கலாம். வார்னர் மீது எப்போதெல்லாம் அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் அதிரடியாக விளையாடி எதிரணியை நிலை குலைய வைப்பார். நிச்சயம் டேவிட் வார்னருக்கு ஏதேனும் ஒரு திட்டம் இருக்கும். அவர் அதிரடியாக விளையாடத் தொடங்கி விட்டால் நிச்சயம் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் டேவிட் வார்னர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவது உறுதியாக விட்டது.

3 மாற்றம்

3 மாற்றம்

இந்த நிலையில் நடுவரிசையில் களமிறங்கிய மேட் ரின்ஷாவுக்கு பதில் ட்ராவிஸ் ஹெட் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேமரான் கிரீன், பீட்டர்ஹான்ஸ் கோம்ப் பதில் விளையாட வாய்ப்பு உள்ளது .இந்த நிலையில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதை ஆஸ்திரேலிய அணி காப்பியடிக்க உள்ளது. இது குறித்து பேசிய கேப்டன் பாட் கம்மிண்ஸ் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடுவது குறித்து யோசிக்கிறோம்.

ஆஸியின் யுத்தி

ஆஸியின் யுத்தி

ஏகார் மற்றும் மேட் குஹ்னேமான் இருவரும் நல்ல உத்வேகத்துடன் இருக்கிறார்கள். இதனால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் இவர்களை பயன்படுத்த முடிவெடுப்போம் என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் 3 சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து நாளைய ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளலாம். இதன் மூலம் ஸ்காட் போலான்ட், மாட் ரீன்ஷா, பீட்டர் ஹான்ஸ்கோம்ப் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது. இதேபோன்று நாளை ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, February 16, 2023, 22:07 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+