விராட் கோலியின் இடத்துக்கு ஏன் அபத்து.. காரணம் கூறும் நம்பர்ஸ்.. வாழ்வா சாவா கட்டத்தில் "கிங்" கோலி
பிர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் இடத்திற்கு ஆபத்து எற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பிசிசிஐயில் தான் வைத்தது தான் சட்டம் என்ற போக்கில் விராட் கோலி இருந்தார்.
ஆனால் காலம் என்பது நிலையானது அல்லவே.. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரஹானேவையே ரன் அடிக்காத காரணத்தால் உட்கார வைத்தது பிசிசிஐ.
இந்த நிலையில், தற்போது விராட் கோலிக்கும் அதே சிக்கல் ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் தற்போதைய ஃபார்மை காட்டிலும், மற்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்.

விராட் கோலி
ஐபிஎல் போட்டியில் கூட கோலி தொடக்க வீரராக களமிறங்கி 3 கோல்டன் டக்கை பெற்றார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டும் முன்பை போல இல்லாமல் சரிவை நோக்கி செல்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து கோலி விளையாடிய டி20 போட்டியை கணக்கில் எடுத்து கொண்டால், 1114 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.82. ஆனால் டி20 போட்டிக்கு முக்கியமான ஸ்ட்ரைக் ரேட் 122.14 மட்டுமே.

சூர்யகுமார் யாதவ்
விராட் கோலிக்கு முதல் ஆபத்தாக இருக்க கூடியவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடர் மூலம் பிரபலம் அடைந்த அவர், 2021ஆம் ஆண்டிலிருந்து டி20 போட்டியில் 1100 ரன்களை அடித்துள்ளார். இவருடைய சராசரி 28.94ஆக இருந்தாலும், ஸ்ட்ரைக் ரேட் 153 ஐ தொட்டு உள்ளது. இதனால் மூன்றாவது வீரராக களமிறங்கும் இவர், அதிரடியாக ஒரு 30 ரன்களை சேர்த்தாலே அது அணிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தீபக் ஹூடா
இளம் வீரர் தீபக் ஹூடா, டி20 போட்டிக்கு என அளவு எடுத்து செய்தது போல் 3 வது வரிசை இறங்கி சிறப்பாக செயல்படுகிறார். 2021ஆம் ஆண்டிலிருந்து தீபக் ஹூடா டி20 போட்டியில் 1110 ரன்களை விளாசி இருக்கிறார். சராசரி 35.80 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 148.59 ஆக உள்ளது. இதனால் தீபக் ஹூடாவை நீக்குவது மாபெரும் தவறாக கருதப்படும்.

சஞ்சு சாம்சன்
இதே போன்று சஞ்சு சாம்சனும் 2021ஆம் ஆண்டிலிருந்து டி20 போட்டியில் மட்டும் கணக்கிட்டால் அவர் 1465 ரன்களை விளாசி இருக்கிறார். அவருடைய சராசரி கிட்டத்தட்ட 35 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 141.68 ஆக உள்ளது. இந்த மூன்று வீரர்களுமே தற்போது விராட் கோலியின் இடத்துக்கு சவால் அளிப்பதால் , வாழ்வா சாவா என்ற கட்டத்துக்கு விராட் கோலி தள்ளப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications