For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு வரும் சேவாக்.. 3 பேர் இடையே கடும் போட்டி.. காத்திருக்கும் சவால்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது முக்கிய ஆட்டங்களில் தோல்வியை தழுவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லை.

இந்த நிலையில் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மாவும் சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு நபர்களை தேர்வு செய்ய பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும் என்றும் பி சி சி ஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பதவிக்கு வர வாய்ப்புள்ள மூன்று நபர்கள் குறித்த தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சேவாக் தான். இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக்கிற்கு ஏற்கனவே பயிற்சியாளர் பொறுப்பு தேடி வந்தது.

3 Contenders Who can became bcci chief selector committee

ஆனால் அவர் அப்போது உள்ள மனநிலையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.தற்போது சேவாக் கிரிக்கெட் தொடர்பாக இந்த பணியில் இல்லை என்பதால் தேர்வு குழு தலைவராக அவர் வருவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தற்போது வட பிராந்தியத்திலிருந்து வந்த சேத்தன் சர்மா தான் ராஜினாமா செய்திருப்பதால் அந்தப் பிராந்திய பகுதியில் இருப்பவர்கள் தான் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிடித்திருப்பவர் முகமது கைஃப். இந்திய அணியில் உள்ள பிரச்சினைகள் என்ன? இந்திய அணியில் என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்தை கூறி வருவதால் இந்த போட்டிக்கு கெயிப் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் களத்தில் விளையாடிய திறமை என அனைத்தும் இருப்பதால் கெயிப் விண்ணப்பித்தால் அவருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் வெங்கடேஷ் பிரசாத் தேர்வு குழுவின் பணிகள் சரியில்லை என்று கடுமையான விமர்சனங்களை வெங்கடேஷ் பிரசாத் வைத்து வருகிறார். மேலும் சில வீரர்களை எந்த வகையில் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இதனால் வெங்கடேஷ் பிரசாத் தேர்வு குழு தலைவர் பதவிக்கு வர தகுதியான நபராக இருப்பார் என தெரிகிறது. எனினும் அவர் தெற்கு பிராந்திய பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது தேர்வு குழு தலைவராக சிவசுந்தர் அந்தப் பணியில் தற்காலிகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 22, 2023, 22:49 [IST]
Other articles published on Jun 22, 2023
English summary
3 Contenders Who can became bcci chief selector committee
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+