Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாணம் ஆனதும் திருந்திய கிரிக்கெட் வீரர்கள்.. ஒரு புகார் கூட வரவில்லையே.. மனைவி மீது பயம்

மும்பை : ஊரில் பல பிரச்சனைகளை செய்கிறான், இவனுக்கு ஒரு கல்யாணம் செய்தால் தான் அடங்குவான் என்று நம் வீட்டு பாட்டி தாத்தாக்கள் பேசி நாம் கேட்டிருப்போம்.

அது பல விஷயங்களில் உண்மையாகவும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு பொறுப்பில்லாமல் இருக்கும் பல ஆண்கள் திருமணத்திற்கு பின்பு குடும்பம்,குழந்தை என பல பொறுப்புகளை சுமக்குகிறார்கள்.

3 cricketers who never caught in any controversies after marriage

இது நம் கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கிய பல வீரர்கள் அதன் பிறகு ஒரு புகார் கூட வராத மாமனிதராக மாறிவிடுகிறார்கள். அவர்கள் பற்றி இந்த செய்திகள் தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நமது தோனி தான். திருமணத்திற்கு முன்பு பல பெண்களுடன் சுற்றி பல கிசுகிசுக்களை சிக்கி இருக்கிறார். குறிப்பாக தமிழ் நடிகைகள் அசின் லட்சுமி ராய் ஆகியோருடன் தோனி டேட்டிங் சென்றிருப்பதாக பல செய்திகளை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் ஷாக்சியை திருமணம் செய்தவுடன் தோனி," உன்னைத் தவிர வேறொரு பெண்ணை உச்சி முகர்ந்து பார்ப்பதும் இல்லை என்று மாறிவிட்டார். அது மட்டும் அல்லாமல் ஷாக்சியின் வருகைக்குப் பிறகு தோனி பல்வேறு தொழிலில் ஈடுபட்டு பிசினஸ் மேனாகவும் மாறிவிட்டார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நமது விராட் கோலி தான். விராட் கோலியின் தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகைகளுடன் ஊர் சுற்றி இருக்கிறார். எப்போதும் பார்ட்டி பார்ட்டி என சுற்றும் விராட் கோலி தற்போது தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகு உத்தமராகவே மாறிவிட்டார்.தற்போது எல்லாம் கோயில், ஜிம் மனைவியுடன் சுற்றுலா என தன்னுடைய வாழ்க்கையை அவர் மாற்றிக் கொண்டார்.

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா தன்னுடைய வாயை அடக்க தெரியாமல் பல பேட்டிகளில் பல சர்ச்சை கருத்துக்களை கூறி இருக்கிறார். இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை வரை ஹர்திக் பாண்டியா பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா தன் மனைவியை திருமணம் செய்த பிறகு இப்படி எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்குவதில்லை. நண்பர்களுடன் வெளியே சென்றாலும் எந்தப் பிரச்சினையிலும் அவர் மாட்டுவதில்லை. இது போன்று மனைவி வந்தவுடன் பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கை மாறி இருக்கிறது.

Story first published: Tuesday, July 25, 2023, 16:28 [IST]
Other articles published on Jul 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+