Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை அணிக்கு தர்மசங்கடம்.. அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் விலகல்.. இந்தியாவை சமாளிக்குமா?

லக்னோ: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் லக்னோவில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை அணியின் முக்கிய வீரர்களும் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அந்த நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹசரங்கா

ஹசரங்கா

இலங்கை அணியின் முன்னணி வீரராக விளங்கும் ஆல்ரவுண்டர் ஹசரங்கா, கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு வந்து அவருக்கு நடத்திய பரிசோதனையில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், இந்திய தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மகிஷ் தீக்சனா

மகிஷ் தீக்சனா

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தீக்சனா தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலம். காரணம், சிஎஸ்கே அணி பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இலங்கை வீரரை தேர்வு செய்துள்ளது. அப்போது என்றால் இவர் திறமையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள். துல்லியமாக சுழற்பந்துவீசும் அவர், இந்திய தொடரில் எப்படி செயல்படுகிறார் என்று ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

குசல் மெண்டீஸ்

குசல் மெண்டீஸ்

இலங்கை அணியின் அதிரடி வீரர் குஷல் மெண்டீஸ், ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அவர் இந்திய தொடரில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவரும் காயம் காரணமாக இந்திய தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இப்படி முன்னணி வீரர்கள் பலரும் விலகியதால் , இலங்கை அணி பலம் வாய்ந்த இந்தியாவை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டதாக இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, February 23, 2022, 20:22 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+