Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மாற்றம்.. 3 வீரர்களுக்கு அடித்த லக்.. அடுத்த கேப்டன் வரிசையில் ஸ்ரேயாஸ்

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 2 வீரர்களுக்கு செம லக் அடித்துள்ளது.

Recommended Video

IND vs WI Shubman Gill மோசமான Run Out ! அன்றே கணித்த Sachin *Cricket

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஷிகர் தவானுக்கு யார் ஜோடியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் இஷான் கிஷன் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர் பந்தயத்தில் இருந்தனர்.

சுப்மான் கில்

சுப்மான் கில்

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் விளையாடிய சுப்மான் கில்லுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுப்மான் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் 49 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை அவர் உறுதி செய்தார்.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

ஆனால் காயம் காரணமாக, சுப்மான் கில் இடம் பறிப்போனது. தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் யாரும் எதிர்பாராத வகையில் சுப்மான் கில் ஒருநாள போட்டிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியிலேயே அதிர்ஷ்டமே இல்லாத சஞ்சு சாம்சனுக்கு செம லக் அடித்துள்ளது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இருந்தாலும், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் வந்த சாம்சன், இதுவரை ஒரே ஒரு 50 ஓவர் போட்டியில் மட்டுமே கடந்த ஆண்டு இலங்கையுடன் விளையாடினார். தற்போது ரிணப் பண்ட் இல்லாத நிலையில், அவருக்கு ஒரு வாய்ப்பை டிராவிட் குழு வழங்கியுள்ளது.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

இதே போன்று, இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருடைய பொறுப்பு தற்போது ஸ்ரேயாஸ்க்கு வழங்கப்பட்டுள்ளத. இதன் மூலம் அடுத்த கேப்டன் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பிடித்துள்ளார். தன்னுடைய பேட்டிங்கில் உள்ள குறையை அவர் சரி செய்தால், அடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஆகலாம் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

Story first published: Friday, July 22, 2022, 19:24 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+